கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

கொவிட்-19 பரவல் பொது முடக்கத்தின் போது, சீரான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய, கப்பல் அமைச்சகம் ஆக்கப்பூர்வமான பணியை செய்கிறது

Posted On: 07 APR 2020 12:45PM by PIB Chennai
கொவிட்-19 பரவலால் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, சீரான கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகப் பணிகள், இன்னல்களை எளிதாக்குதல், அதே சமயம், பொது முடக்கத்தின் போது அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்ய, கப்பல் அமைச்சகம் விரைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. * வெப்பமானிகளைக் கொண்டு 46,202 பயணிகள் 27/01/2020 முதல் 04/04/2020 வரை இந்திய துறைமுகங்களில் பரிசோதிக்கப்பட்டார்கள். அதில், 39,225 பேர் முக்கிய துறைமுகங்களில் பரிசோதிக்கப்பட்டார்கள். * பொது முடக்கத்தின் காரணமாக 22 மார்ச்சில் இருந்து 14 ஏப்ரல் 2020 வரை சரக்குகள் வந்தடைவதிலோ/சரக்குகளை எடுத்து செல்வதிலோ/ இறக்குவதிலோ தாமதம் ஏற்பட்டால் அதற்கான அபராதம், வாடகை, தாமதக் கட்டணம் துறைமுக உபயோகிப்பாளர் எவரிடம் இருந்தும் (வணிகர்கள், கப்பல் சரக்கு தொழில்கள், சலுகை உரிமைப் பெற்றவர்கள், உரிமம் உடையோர் மற்றும் பலர்) வசூலிக்கப்படவில்லை என ஒவ்வொரு முக்கிய துறைமுகமும் உறுதி செய்ய வேண்டும். * அரசு தனியார் கூட்டுப் பங்கேற்பு (PPP) அல்லது வேறு விதத்தால் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்தின் நிறைவுக் காலமும், துறைமுகங்களால் நீட்டிக்கப்படலாம். * முக்கிய துறைமுகப் பொறுப்புக் கழங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் போதிய பணியாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில துறைமுக மருத்துவமனைகளில், தனியாக உள்ளே செல்லும் வழி மற்றும் வெளியேறும் வழியுடன், மருத்துவமனையின் ஒரு பகுதி கொவிட்-19க்காக ஒதுக்கப்படலாம். * கப்பல் அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைமுகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ரு. 52 கோடிக்கும் அதிகமானத் தொகையை பெருநிறுவனப் பொறுப்பு நிதியில் இருந்து பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு வழங்கியுள்ளன. * துறைமுகம், பொதுத்துறை நிறுவனம் மற்றும் கப்பல் அமைச்சகத்தின் இதர அலுவலகங்களின் ஊழியர்கள் ரு. 7 கோடிக்கும் அதிகமான தொகையை தங்கள் ஊதியங்களில் இருந்து பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு வழங்கியுள்ளனர். * கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கப்பல் தொழில்களுக்கு உதவ, கப்பல்கள் இயக்குநரகம் ஒரு வழிகாட்டுதல் கையேட்டைத் தயாரித்துள்ளது. துறைமுக நுழைவுக் கட்டுப்பாடுகள், கடலோடிகளுக்கான கொவிட் 19க்கு எதிரான நடைமுறை பாதுகாப்பு நடவடிக்கைகள், கப்பலில் ஏறுவதற்கு முன்பான பரிசோதனை, பாதிப்டைந்துள்ளதாக சந்தேகிக்கும் நபர்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்த வழிமுறை, கப்பல்களில் கடலோடிகள் பின்பற்ற வேண்டிய சுகாதாரப் பழக்கவழக்கங்கள், அதிக ஆபத்து நிலைமைகளின் நிர்வாகம், பாதிக்கப்பட்ட நபர்களைக் கையாளுதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சுத்தப்படுத்துதல், கிருமி நீக்கம் மற்றும் கழிவுகளைக் கையாளுதல் குறித்த அறிவுறுத்தல்களை அந்தக் கையேடு கொண்டுள்ளது. * இலவச நேர ஏற்பாட்டைத் தாண்டி விதிக்கப்படும் கொள்கலன் தடுப்புக் கட்டணத்தை 22 மார்ச், 2020 முதல் 14 ஏப்ரல், 2020 வரை (இந்த இரு நாட்களுக்கும் சேர்த்து) எந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கலன் சரக்குகளுக்கும் விதிக்கக்கூடாதென்று கப்பல் சரக்கு தொழில்களுக்கு, கப்பல் தலைமை இயக்குநரின் 7ஆம் எண் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளன. * இந்திய ஏற்றுமதி/இறக்குமதி தொழிலுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, 22 மார்ச், 2020 முதல் 14 ஏப்ரல், 2020 வரையிலான காலகட்டத்தில், தாமதக் கட்டணம், இலவசக் காலத்துக்கு பிறகான தரை வாடகை, துறைமுக சேமிப்பு கட்டணம், கூடுதல் நங்கூரக் கட்டணங்கள், இட வாடகைக் கட்டணம் அல்லது களன் தாமதக் கட்டணம், அல்லது வேறெந்த அபராதக் கட்டணத்தையும் சரக்கு உரிமையாளர்கள்/வகைப்படுத்தப்படாத சரக்கின் பெறுநர் (மொத்த, இடைவெளி மொத்த மற்றும் திரவ சரக்கு) மீது விதிக்கக் கூடாதென்று கப்பல் நிறுவனங்களுக்கும், போக்குவரத்து நிறுவனங்களுக்கும் கப்பல் தலைமை இயக்குநரின் எட்டாம் எண் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ***

(Release ID: 1611972) Visitor Counter : 215