மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அறிவுறுத்தலின்படி, கொவிட்-19 சூழ்நிலையில் மாணவர்களின் மன ஆரோக்கியம் & உடல் ஆரோக்கியம் குறித்து பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தல்கள் வெளியீடு

Posted On: 06 APR 2020 3:21PM by PIB Chennai

கொவிட்-19  அச்சுறுத்தல் சூழ்நிலையில்,  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்வி நிலையங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், மாணவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்' அறுவுறுத்தியிருந்தார்.

அதன்படி, கொவிட்-19 காலத்தில் மாணவர் சமுதாயத்தினருக்கு எந்த வகையிலான மனநலம் மற்றும் மன-சமூக கவலைகள் தோன்றாமல் இருப்பதற்காக, மாணவர்களின் மன நலம், உளவியல் விஷயங்கள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக, பின்வரும் நடவடிக்கைகளை  அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

 

1. பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் மன நலம், மன சமூக கவலைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களைக் கையாள உதவி மையங்கள் தொடங்க வேண்டும். கலந்தாய்வு அளிப்பவர்கள் மற்றும் அடையாளம் உறுதி செய்யப்பட்ட கல்விக் குழுவினரால் இந்த உதவி மையம் அவ்வப்போது கண்காணிப்பு செய்து மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

2. பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் சார்பில் கலந்துரையாடல்கள், வேண்டுகோள்கள் / கடிதங்கள் மூலம் மாணவர்களை அவ்வப்போது நல்வழிப்படுத்தி அமைதியாக, மன அழுத்தம் இல்லாதிருக்கும்படி செய்ய வேண்டும். தொலைபேசிகள், இமெயில்கள், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலமாக இவற்றைச் செய்யலாம்.

3. விடுதி வார்டன்கள்/ உதவியில் இருக்கும் மாணவர்கள்/ வகுப்புத் தோழர்கள் / நண்பர்களை அடையாளம் காணும் அளவிலான மூத்த ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட கொவிட்-19 உதவிக் குழுக்களை அமைத்து, தேவையான நேரத்தில் உடனடி உதவி அளிக்க வேண்டும்.

 

  • கொவிட்-19 சமயத்தில் மன ஆரோக்கியம் & உடல்நலன் பேணுதல் குறித்து பல்வேறு உடல்நல நிபுணர்கள் வழிகாட்டுதல் https://www.youtube.com/watch?v=iuKhtSehp24&feature=youtu.be
  • நடத்தைசார் ஆரோக்கியம்: மன-சமூக கவலைகளுக்கான கட்டணம் இல்லாத உதவி மையம் - 0804611007

*****



(Release ID: 1611721) Visitor Counter : 272