சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் 19 தற்போதைய தகவல்கள்

Posted On: 05 APR 2020 6:48PM by PIB Chennai

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பது, நோய் பரவாமல் தடுப்பது, இதர மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை தொடர்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் கொவிட்-19 நோய்க்கு எதிரான தொற்றைத் தடுப்பது குறித்து திட்டமிடுதல், தயார் நிலையில் இருத்தல், திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள குழுக்களுடனான கூட்டுக் கூட்டம் ஒன்று, நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் எய்ம்ஸ் மருத்துவமனையை, நேரில் சென்று பார்வையிட்டார்.

 

நாட்டில் இதுவரை கொவிட்-19 வைரஸ் நோயால் மொத்தம் 274 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 கான, (rapid antibody) ராப்பிட் ஆன்டிபாடி ரத்த பரிசோதனை தொடர்பாக ஐ சி எம் ஆர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் ஒரு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 

இதுவரை 3374 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், 79 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 267 பேர் குணமடைந்து, மருத்துவமனைகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளனர். கொவிட்-19 பற்றிய உண்மையான விவரங்கள், தற்போதைய தகவல்கள், கொவிட்-19  தொடர்பான தொழில்நுட்ப விவரங்கள், விதிமுறைகள், அறிவுரைகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த இணையதளத்தைப் பார்க்கவும் https://www.mohfw.gov.in/.


(Release ID: 1611527) Visitor Counter : 161