சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 நிலவரம்
प्रविष्टि तिथि:
02 APR 2020 5:39PM by PIB Chennai
கொவிட்-19 தொடர்பான அனைத்து தொழில் நுட்ப வழிகாட்டுதல்களும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைய தளத்தில் (https://www.mohfw.gov.in/) பதிவேற்றப்பட்டுள்ளன. கூடுதலாக, கொரோனோ தொற்று நோயாளிகளுக்கு, டயாலிஸிஸ் செய்வது தொடர்பாக இந்த அமைச்சகம் அளித்துள்ள நெறிமுறைகளும் இணைய தளத்தில் தற்போது பதிவேற்றப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் தொடர்பாக, மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம், மனப்பதட்டம் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும் இணைய தளத்தில் உள்ளன. மன நலம் தொடர்பான கேள்விகளுக்கும் உதவிக்கும் 08046110007 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இதுவரை, 1965 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 50 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 328 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது மற்றும் 12 பேர் இறந்துள்ளனர். 151 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
*****
(रिलीज़ आईडी: 1610422)
आगंतुक पटल : 239
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Marathi
,
English
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada