சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 நிலவரம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2020 5:37PM by PIB Chennai

முடக்க நிலையையொட்டி, குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு, நிவாரண முகாம்களிலும், தனிமைப்படுத்தலின் போதும் உணவு, குடிநீர், மருந்துகள், சுகாதார வசதி உள்ளிட்ட அவர்களின் நலனுக்கான அனைத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் மனநலம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான அறிவுறுத்தலை அளித்துள்ளது. இதற்கான இணைப்பு :

https://www.mohfw.gov.in/pdf/RevisedPsychosocialissuesofmigrantsCOVID19.pdf.

அனைத்து தொழில் நுட்ப வழிகாட்டுதல்களும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைய தளத்தில் (https://www.mohfw.gov.in/) பதிவேற்றப்பட்டுள்ளன.

இதுவரை, 1637 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 38 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 376 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது மற்றும் 3 பேர் இறந்துள்ளனர். 132 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1610000) வருகையாளர் எண்ணிக்கை : 179