பிரதமர் அலுவலகம்
கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு நன்றி தெரிவித்த மக்களுக்கு பிரதமர் நன்றி
'வெற்றி அணிவகுப்பின் தொடக்கம்': பிரதமர்
प्रविष्टि तिथि:
22 MAR 2020 6:32PM by PIB Chennai
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் களத்தில் முன்னணியில் நிற்பவர்களுக்கு நன்றி தெரிவித்ததற்காக, மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி கூறினார். "கொரோனா வைரசுக்கு எதிரான போரை வழிநடத்தும் ஒவ்வொருவருக்கும் நாடு நன்றி தெரிவித்தது. நாட்டு மக்களுக்கு நன்றிகள் பல," என தனது சுட்டுரைப் பதிவுகளில் பிரதமர் எழுதினார்.
இந்த நிகழ்வு, கொவிட்-19 சிக்கலுக்கு எதிரான நீண்ட போராட்டத்தில் தேசத்தின் வெற்றியை அடையாளப்படுத்தியிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். இதே உறுதி மற்றும் கட்டுப்பாட்டுடன் சமுக இடைவளிக் கோட்பாட்டுக்கு ஏற்ப மக்கள் தங்களை கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
***
(रिलीज़ आईडी: 1609058)
आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam