பிரதமர் அலுவலகம்

மக்கள் ஊரடங்கு ஒரு நீண்ட போரின் தொடக்கம் மட்டுமே: பிரதமர்

प्रविष्टि तिथि: 22 MAR 2020 9:46PM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிரான நீண்ட போரில் இது ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், போக வேண்டிய பாதை மிக நீண்டது என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி சுட்டுரை பதிவுகளில் தெரிவித்துள்ளார். மனநிறைவு அடைய வேண்டாம் என்று மக்களை எச்சரித்த அவர், இதை வெற்றி என கருத வேண்டாம் எனவும், கொண்டாட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். "இன்று, தங்களால் முடியும் என்றும், தாங்கள் முடிவு செய்தால், பெரிய சவாலை ஒன்றிணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றும் நாட்டு மக்கள் காட்டியுள்ளார்கள்," என அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய அரசும், மாநில அரசும் அவ்வப்போது அறிவிக்கும் வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக்கொண்டார். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்ட அவர், மற்ற பகுதிகளிலும் மிகவும் அவசியத் தேவை இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

***


(रिलीज़ आईडी: 1609054) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam