மத்திய அமைச்சரவை

துணிவகைகள், ஆயத்த ஆடைகளுக்கு வரித் தள்ளுபடியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 25 MAR 2020 3:39PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்  கூட்டத்தில், வரும் ஏப்ரல் 1 முதல், மாநில மற்றும் மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் தள்ளுபடி திட்டம், ஏற்றுமதி பொருட்கள் மீதான கட்டணங்கள் மற்றும் வரிகள் குறைப்புடன் இணைக்கப்படும் காலம் வரை தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு வரி முறைகள் இணைக்கப்படும் வரை, துணிவகைகள் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு தள்ளுபடி அளிக்கும் திட்டம், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் விதிமுறைகள் மற்றும் கட்டணங்களின்படி, எந்தவித மாற்றமும் இன்றி, ஏப்ரல் 1 முதல் தொடரும்.

மாநில மற்றும் மத்திய வரிகள் மற்றும் தீர்வைகள் தள்ளுபடி திட்டம் மார்ச் 31-க்குப் பின்னரும் தொடர்வது, வேறு எந்த நடைமுறையிலும் தற்போது புழக்கத்தில் இல்லாத அளவுக்கு அனைத்து வரிகள் மற்றும் தீர்வைகளை தள்ளுபடி செய்வதன் வாயிலாக, ஜவளித்துறையைப் போட்டிக்குரியதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

*****


(रिलीज़ आईडी: 1608141) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam