மத்திய அமைச்சரவை
உள்நாட்டு சுற்றுலாவுக்கு 2018-19-ல் அனுமதிக்கப்பட்ட 10 திட்டங்களுக்கு ரூ.627.40 கோடி நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2019-20-ல் அனுமதிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.1854.67 கோடி
प्रविष्टि तिथि:
24 DEC 2019 4:24PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உள்நாட்டு சுற்றுலாவுக்கு 2018-19-ல் அனுமதிக்கப்பட்ட 10 திட்டங்களுக்கு ரூ.627.40 கோடி நிதி வழங்கவும், மேலும் 2019-20-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.1854.67 கோடி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டு சுற்றுலா திட்டத்தின் கீழ் மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்தியாவை உலக அளவில் நிலையான, சிறந்த சுற்றுலா தலமாக உருவாக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.
இந்த உள்கட்டமைப்புக்கான வசதிகள் தனியார் துறை சார்பில் வருவாயை ஈட்டும் திட்டங்களில் முதலீட்டை ஈர்க்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும், வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும்.
(रिलीज़ आईडी: 1597441)
आगंतुक पटल : 120