கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்ட, 5 மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் துணைத் தலைப்புகள் உருவாக்கியுள்ள பிரபல மொழிபெயர்ப்பாளர் ரெக்ஸ், இந்திய சினிமாவை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் துணைத் தலைப்புகளின் பங்கு குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
துணைத் தலைப்புகள் உருவாக்கம் என்பது வெறும் வார்த்தை மொழிபெயர்ப்பு மட்டுமல்ல; அதற்குப் பொறுமை, படைப்பாற்றல், கலாச்சாரப் புரிதல், திரைப்படத்தின் உணர்வுகளை உள்வாங்கும் திறன் ஆகியவை அவசியம் என அவர் கூறினார். ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு பிராந்திய திரைப்படங்கள் உலகளவில் சென்றடைவதைக் குறிப்பிட்ட அவர், காது கேளாதோருக்குத் துணைத் தலைப்புகள் மிக முக்கியமான கருவியாக அமைவதாகத் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் துணைத் தலைப்புகள் காட்சிகளின் உணர்வுப்பூர்வமான பின்னணியைத் தவறவிட்டு, அர்த்தங்களை மாற்றிவிடக்கூடும் என எச்சரித்த அவர், கதைகள் மொழி, கலாச்சார எல்லைகளைக் கடந்து பார்வையாளர்களுடன் இணைய மனிதப் படைப்பாற்றல் இன்றியமையாதது என வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341595®=3&lang=1
***
SK/PD/SU