கோவாவின் பனாஜியில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் வளாகம், திரைப்படங்களைக் கடந்து இந்தியாவின் படைப்பாற்றல், கலாச்சாரப் பன்முகத்தன்மை, பிராந்திய உணவு வகைகள், உள்ளூர் தயாரிப்புகளின் சங்கமமாகத் திகழ்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல்தன்மை, கண்ணியத்தை வலியுறுத்தி ‘ஸ்வயம்’ அமைப்பு இரண்டாவது முறையாக இவ்விழாவில் பங்கேற்று, அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சார அனுபவத்தை வலுப்படுத்துகிறது.
மும்பை இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐசிடி), வெளியீடுகள் பிரிவு இயக்குநரகம், புனே இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (எஃப்டிஐஐ), சென்னை எஸ்ஏ திரைப்பட அகாடமி உள்ளிட்ட நிறுவனங்களும், பிரைம் வீடியோ, ஸ்டோரி டிவி செயலி, பிக் எஃப்எம் ஆகிய தளங்களும் அரங்குகளை அமைத்துள்ளன. பாரம்பரிய நாகா உணவுகள், பிரியாணி, தோசை, கோவா வன வளர்ச்சிக் கழகத்தின் உள்ளூர் முந்திரிப் பருப்புகள் பார்வையாளர்களைக் கவர்கின்றன. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கோவா பொழுதுபோக்குச் சங்கம், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஆகியவை இதற்கான ஆதரவை வழங்கியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341736®=3&lang=1&_gl=1
***
SS/SE/SH