இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்பு தினத்தையொட்டி மை பாரத் சார்பில் 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இளையோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 1:00PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகத்தின், எனது இளைய பாரதம் (மை பாரத்) அமைப்பின் மூலம், அரசியலமைப்பு தினத்தையொட்டி 2026 நவம்பர் 24 முதல் 26 வரை 'வளர்ச்சியடைந்த இந்தியா இளையோர் கலந்துரையாடல்' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 30-க்கும் மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 600-க்கும் அதிகமான மாவட்டங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களை 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்திய அரசியலமைப்பின் முகவுரையை வாசித்து, அரசியலமைப்பு மாண்புகளைக் கடைபிடிப்பதில் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த உள்ளனர். இளம் சாதனையாளர்கள் பங்கேற்று, வளர்ச்சியடைந்த இந்தியா 2047, வறுமை ஒழிப்பு, நக்சலிச ஒழிப்பு, போதைப்பொருள் இல்லாத இந்தியா ஆகியவை குறித்து சிறப்புரை ஆற்றுவார்கள்.

மேலும், பத்ம விருது பெற்றவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி தங்களது வாழ்க்கைப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான பதிவுகள், இதர செயல்பாடுகள் mybharat.gov.in இணையதளம் மூலம் மேற்கோள்ளப்பட உள்ளது..

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340251&reg=3&lang=1

***

SS/PD/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2340429) வருகையாளர் எண்ணிக்கை : 10