57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

படைப்பாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் என்எஃப்டிசி – சோனி பிக்சர்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2026 1:50PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2339964Views: 22

கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமும், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன் மூலம், 'வேவ்ஸ் பஜார் – உள்ளடக்கப் படைப்பாளர்கள் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியா முழுவதும் உள்ள எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் ஆகியோர் தங்களுடைய புதிய கற்பனை, கற்பனையல்லாத படைப்புகளை சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பிக்கலாம்.

இந்த வாய்ப்பு இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, வங்காளம் ஆகிய ஐந்து மொழிகளில் வழங்கப்படுகிறது. கற்பனைத் தொடர்கள், உயர்தரத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள், திறமையாளர்களை அடையாளம் காணும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான படைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேவ்ஸ் பஜார் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். அவற்றை என்எஃப்டிசி நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி பரிசீலித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களுக்கு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தங்களுடைய படைப்புகளை விளக்க வாய்ப்பளிக்கும்.

என்எஃப்டிசி தலைவர் ஜி. கிருஷ்ணகுமார், பல்வேறு நாடுகளின் கதைகள், கலாசாரங்கள், படைப்பாற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தளமாக இத்திரைப்பட விழா திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

என்எஃப்டிசி நிர்வாக இயக்குநர் தீரஜ் சிங், படைப்பாளர்களையும் திரைத்துறையையும் இணைக்கும் பாலமாக வேவ்ஸ் பஜார் செயல்படுவதாகத் தெரிவித்தார்.

சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கவுரவ் பானர்ஜி, நாட்டில் ஏராளமான திறமையான படைப்பாளர்கள் இருப்பதாகவும், அவர்களுடைய படைப்புகள் பெரிய நிறுவனங்களைச் சென்றடைய இந்தத் திட்டம் உதவும் என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339903&reg=3

***

SK/PLM/RJ


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339964
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026