இந்தியாவின் திரைப்படப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா (IFFI 2026) நிகழ்ச்சியில் இரண்டு புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் வெளியீட்டுப் பிரிவு இந்த நூல்களை வெளியிட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார், திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கானவை மட்டுமல்ல எனவும் அவை சமூகத்தின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன என்றும் தெரிவித்தார். திரைப்படங்கள் கதைகளைச் சொல்கின்றன என்று அவர் கூறினார். ஆனால் அந்தக் கதைகள் எவ்வாறு உருவாகின என்பதைப் புரிந்துகொள்ள நூல்கள் உதவுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளியிடப்பட்ட இரண்டு நூல்கள்:
1. சினிமா: விவித் ஆயாம் (Cinema: Vividh Aayam): திரு. ராஜேந்திர பட் தொகுத்துள்ள இந்நூல், திரைப்பட வரலாறு, ஒளிப்பதிவு, உலகத் திரைப்படங்கள், திரைப்பட உருவாக்கத்தின் பின்னணிச் செயல்முறைகள் குறித்த கட்டுரைகள், உரையாடல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை இந்தி வாசகர்களுக்குப் பயனளிக்கும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன.
2. அவ்தார் கவுல்: முழுமையடையாத கதை (Awtar Kaul: The (In)Complete Story): திரு வினோத் கவுல் எழுதிய இந்நூல், கடிதங்கள், புகைப்படங்கள், நினைவுகள், உரையாடல்கள் மூலம் இயக்குநர் மறைந்த அவ்தார் கவுலின் வாழ்க்கையையும் அவரது கலைப் பயணத்தையும் பதிவு செய்கிறது.
அவ்தார் கவுல் இயக்கிய ஒரே திரைப்படமான '27 டவுன்' (1974), முக்கியப் படைப்பாகத் திகழ்ந்ததுடன் தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.
வெளியீட்டுப் பிரிவு தலைமை இயக்குநர் திருமதி கஞ்சன் பிரசாத், திரைப்படங்களின் படைப்புப் பயணங்களைப் பதிவு செய்வதில் நூல்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339615®=3&lang=1