நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நிதி ஆயோக்கின் 'தலைமைத்துவம் என்பது ஒரு பணியே' தேசியப் பயிலரங்கில் 'கர்மயோகி சங்கல்ப்' திட்டத்தை மத்திய அமைச்சரவைச் செயலாளர் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 NOV 2026 9:25PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசாங்கத் தலைவராக 25 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு, நிதி ஆயோக் சார்பில் புதுடெல்லி பாரத் மண்டபத்தில் நடத்தப்பட்ட ‘தலைமைத்துவம் என்பது ஒரு பணியே' தேசியப் பயிலரங்கின் நிறைவு அமர்வில், மத்திய அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி.வி. சோமநாதன் இன்று ‘கர்மயோகி சங்கல்ப்’ திட்டத்தை iGOT கர்மயோகி தளத்தில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள குடிமைப் பணி அதிகாரிகள் தங்கள் தலைமைத்துவப் பண்புகளில் கொண்டுவரவுள்ள குறிப்பிட்ட மாற்றங்களை ஆன்லைனில் பதிவு செய்வர். நல்லாட்சி தினமான டிசம்பர் 25, 2026-க்குள் 25,000 உறுதிமொழிகளைப் பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா தொடக்க உரையாற்றினார். 2001 கட்ச் பூகம்ப மறுசீரமைப்பு, கோவிட்-19 மேலாண்மை, 'லட்சாதிபதி சகோதரி' மற்றும் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் குறித்த அனுபவப் பகிர்வுகள் மற்றும் 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

இத்தகவலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2337664&reg=3&lang=1

***

SK/NB/PS

 


(வெளியீட்டு அடையாள எண்: 2337972) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: Odia , Telugu , English , Khasi , Urdu , हिन्दी , Nepali , Assamese , Bengali-TR , Gujarati , Kannada