சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசநோய் ஒழிப்பில் முன்னேற்றம்: காசநோய் உயிரிழப்பு 38% குறைவு, 94% சிகிச்சை வெற்றி விகிதம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 8:40PM by PIB Chennai

காசநோய் ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியா முக்கிய சாதனையை படைத்துள்ளது. 2015-ம் ஆண்டு முதல் உலகளவில் காசநோய் உயிரிழப்பு 35% குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் 38% குறைந்துள்ளதுடன், சிகிச்சை வெற்றி விகிதம் 94% ஆக உயர்ந்துள்ளது. 2026 நவம்பர் 12 அன்று வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின், உலகளாவிய காசநோய் அறிக்கை 2026-ல் இந்தியாவின் இந்தச் சாதனை குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், காசநோய் இல்லாத இந்தியா இயக்கம் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு எக்ஸ்-ரே பரிசோதனை, விரைவான மூலக்கூறு பரிசோதனை, நிக்ஷய் ஊட்டச்சத்து திட்டம், நிக்ஷய் மித்ரா முன்முயற்சி ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்திற்கான நிதித் தேவைகளில் 96% உள்நாட்டு வளங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

2024 டிசம்பர் 7 முதல் 2026 நவம்பர் 8 வரை நடத்தப்பட்ட பரிசோதனை முகாம்களில் 25 கோடிக்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 கோடிக்கும் மேற்பட்டோருக்கு மார்பக எக்ஸ்-ரே பரிசோதனைகளும், 3 கோடிக்கும் அதிகமான மூலக்கூறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 14.97 லட்சம் அறிகுறியற்ற நோயாளிகள் உட்பட 48.64 லட்சம் புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் 2025-ம் ஆண்டில் 67,933 ஊராட்சிகள் காசநோய் இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335615&reg=3&lang=1

***

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2335808) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Khasi , Urdu , Marathi , Nepali , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Kannada , Malayalam