பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அக்னி வீரர்கள் பாதுகாப்பு படையில் நிரந்தரமாக சேருவதற்கான வழிவகைகள் உருவாக்கம்: பாதுகாப்புதுறை அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 4:14PM by PIB Chennai

அக்னி வீரர்களின் திறன், உடற்தகுதி, தொழில்நுட்ப திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, அவர்களின் பணிச் சூழலை மேம்படுத்த மத்திய பாதுகாப்புதுறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் தகுதியின் அடிப்படையில் 25 சதவீத அக்னி வீரர்களுக்கு பாதுகாப்பு படையில் நிரந்தர பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 75 சதவீத அக்னி வீரர்களுக்கு பாதுகாப்பு படையின் பரிந்துரையின்பேரில், மேலும் 2 ஆண்டுகள் கூடுதலாக பணிபுரிய பாதுகாப்புதுறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு ஆண்டுகள் நிறைவுபெற்றவுடன் தொடர்ந்து பணிபுரிய விரும்பும் அக்னி வீரர்கள் தகுதி தேர்வின் அடிப்படையில் நிரந்தரப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

அக்னிவீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்பு கணிசமாக அதிகரிப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு மிகவும் தரமான முறையிலும், வெளிப்படை தன்மையுடன் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி வீரர்களுக்கான உடற்திறன், நன்னெறி, மன உறுதி, ஊக்கம், ஒழுக்கம் ஆகியவை முறையாக பேணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி வீரர்களின் திறனை உயர்த்தவும், தகவல் தொழில்நுட்பத்திற்கேற்ப வீரர்கள் தங்களை தகவமைத்துக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு படைகளின் பல்வேறு பிரிவுகளில் பெண்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிவீர் திட்டம் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சகம், ஊதிய உயர்வு, பணி மூப்பு சார்ந்த சலுகைகள் வீரர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி வீரர்களை பாதுகாப்பு படையில் முழுமையாக  இணைப்பதற்கான வழிவகைகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332524&reg=3&lang=1&_gl=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2332785) வருகையாளர் எண்ணிக்கை : 20