உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சரின் திறன் விருது 2026: தமிழ்நாட்டைச் சேர்ந்த உதவி காவல் கண்காணிப்பாளர்கள், தடய அறிவியல் நிபுணர் உள்ளிட்டோருக்கு விருது அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2026 9:55AM by PIB Chennai

தமிழ்நாட்டைச் சேர்ந்த உதவி காவல் கண்காணிப்பாளர்கள் திருமதி மது குமாரி, திரு வி சதீஷ் குமார், தடய அறிவியல் துறை துணை இயக்குநர் டாக்டர் ராஜஸ்ரீ ரகுநாத் உள்ளிட்டோர், சிறப்பான விசாரணை மற்றும் அறிவியல் புலனாய்வுப் பணிகளுக்காக 2026-ம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் திறன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இவ்விருது பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய ஆயுதக் காவல் படைகள், மத்திய காவல் அமைப்புகளைச் சேர்ந்த 490 பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

விருது பெற்றவர்கள் ஆற்றிய சிறந்த பணிகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருது, உயர் தொழில்முறை தரநிலைகளை ஊக்குவிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்/பணியாளர்களின் மன உறுதியை அதிகரிக்கவும் வழங்கப்படுகிறது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் பேரில், தொடங்கப்பட்ட இந்த விருது, அனைத்துக் காவல் பணியாளர்களின் மன உறுதியையும் ஊக்குவிக்கும்.

மத்திய உள்துறை அமைச்சகம் 2024 பிப்ரவரி 1 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, ‘மத்திய உள்துறை அமைச்சரின் திறன் விருது’ என்ற பெயரில் இந்த விருது உருவாக்கப்பட்டது.

 

 

இந்த விருது, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/மத்திய காவல் அமைப்புகள் / மத்திய ஆயுதக் காவல் படைகள் / தேசிய பாதுகாப்புப் படை / அசாம் ரைபிள்ஸ் ஆகிய காவல் படைகள், பாதுகாப்பு அமைப்புகள், உளவுப் பிரிவுகள் / சிறப்புப் பிரிவுகள், தடய அறிவியல் (மத்திய/மாநில/யூனியன் பிரதேசங்கள்) துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த செயல்பாடுகள், புலனாய்வில் மிகச்சிறந்த சேவை, விதிவிலக்கான செயல்பாடு, துணிச்சலான உளவுப் பணி, தடய அறிவியல் துறையில் அரசு விஞ்ஞானிகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விருது அளிக்கப்படுகிறது.

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான, அக்டோபர் 31-ம் தேதி அன்று  இந்த விருது அறிவிக்கப்படுகிறது.

விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல், உள்துறை அமைச்சகத்தின்  இணையதளத்தில் (https://www.mha.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330728®=3&lang=1

(Release ID: 2330728)

****

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330841) வருகையாளர் எண்ணிக்கை : 15