விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

11 கோடி விவசாயி அடையாள அட்டைகள் உருவாக்கம், டிஜிட்டல் விவசாயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை - மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான்

இடுகை இடப்பட்ட நாள்: 24 OCT 2026 1:56PM by PIB Chennai

டிஜிட்டல் வேளாண் நடைமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,11 கோடி விவசாயி அடையாள அட்டைகள் 2027 மார்ச் 31-ம் தேதிக்குள் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்த காலக்கெடுவிற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே, இலக்கு எட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனையை, வளமான விவசாயிகளுடன் கூடிய வளர்ச்சியடைந்த  இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

மத்திய வேளாண் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் வேளாண் இயக்கத்தின் கீழ், இந்த மைல்கல் சாதனை எட்டப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஒரு தனித்துவ டிஜிட்டல் அடையாளத்தை வழங்குவதற்காக, இந்த விவசாயி அடையாள அட்டைத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காகிதப் பயன்பாட்டை   குறைப்பதுடன், அரசுத் திட்டங்கள், வங்கிக் கடன், பயிர்க் காப்பீடு மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை வெளிப்படையான, திறமையான மற்றும் சரியான நேரத்தில் அணுகுவதற்கும் வழிவகுக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2327905&reg=3    

****

AD/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327969) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Gujarati , Telugu_Vw , Kannada