இடுகை இடப்பட்ட நாள்:
27 JUL 2026 10:22PM by PIB Chennai
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பவன் சந்தனா, நாகவ் பரத் டாகா உடனான தமது சிறந்த உரையாடல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பல்வேறு இதர ஆர்வமிக்க அம்சங்களுடன் விக்ரம் 1-ன் வெற்றியும் இந்த கலந்துரையாடலில் முக்கிய இடம் பிடித்ததாகக் குறிப்பிட்டார். அவர்கள் இதுவரை மேற்கொண்ட பயணம், எதிர்காலம் குறித்தக் கருத்துக்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்தது மகிழ்ச்சி அளித்தாக அவர் கூறினார்.
அவர்களுடைய சக்தி, லட்சியம், நேர்மறையான அணுகுமுறை ஆகியவை நம்முடைய தனியார் விண்வெளித் துறையின் துடிப்புமிக்க உத்வேகத்தைப் பிரதிபலிப்பதாக கூறிய திரு மோடி, ஸ்கைரூட் குழு அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:
“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பவன் சந்தனா, நாகவ் பரத் டாகா உடனான சிறந்த உரையாடல்.
பல்வேறு இதர ஆர்வமிக்க அம்சங்களுடன் விக்ரம் 1-ன் வெற்றியும் இந்த கலந்துரையாடலில் முக்கிய இடம் பிடித்தது. அவர்கள் இதுவரை மேற்கொண்ட பயணம், எதிர்காலம் குறித்தக் கருத்துக்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர்களுடைய சக்தி, லட்சியம், நேர்மறையான அணுகுமுறை ஆகியவை நம்முடைய தனியார் விண்வெளித் துறையின் துடிப்புமிக்க உத்வேகத்தைப் பிரதிபலிக்கிறது. ஸ்கைரூட் குழு அனைவருக்கும் வாழ்த்துகள்”.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290210®=48&lang=2
***
SS/IR/SM/SH