பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை: பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 17 JUN 2026 10:03PM by PIB Chennai

இந்தியா-பிரிட்டன் நாடுகளிடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் 2026 ஜூலை 15 அன்று நடைமுறைக்கு வரும் நிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகம், முதலீட்டை கணிசமாக ஊக்குவிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகள், தொழிலாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், புத்தாக்க முயற்சியை மேற்கொள்பவர்களுக்குப் பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை அடைவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் என்று திரு நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஜி7 உச்சிமாநாட்டிற்காக ஏவியனில் இருக்கும் தமக்கும், பிரிட்டன் பிரதமர் திரு கெய்ர் ஸ்டார்மருக்கும், இவ்விரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தியா-பிரிட்டன் நாடுகளிடையேயான உறவுகளில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை.

இந்தியா-பிரிட்டன் இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் 2026 ஜூலை 15 அன்று நடைமுறைக்கு வரவுள்ளது  மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இந்த ஒப்பந்தம், இருதரப்பு வர்த்தகம், முதலீடுகளைக் கணிசமாக ஊக்குவிக்கும்.

இது இந்திய விவசாயிகள், தொழிலாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்குப் பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டுவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும்.

ஜி7 உச்சிமாநாட்டிற்காக ஏவியனில் இருக்கும் பிரதமர் திரு கெய்ர் ஸ்டார்மரும், நானும், இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்."

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274338&reg=48&lang=2   

***

TV/SV/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2324359) வருகையாளர் எண்ணிக்கை : 8