உள்துறை அமைச்சகம்
மும்பையில் நடைபெற்ற இந்தி தினம் மற்றும் அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2026 5:19PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று மும்பையில் நடைபெற்ற இந்தி தினம் 2026, 6-வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு ஆகியவற்றில் தலைமை விருந்தினராக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர்கள் திரு ஏக்நாத் ஷிண்டே, திருமதி சுனேத்ரா பவார், மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் திரு நித்யானந்த் ராய், திரு பண்டி சஞ்சய் குமார், அலுவல் மொழித் துறை செயலாளர் திருமதி அன்ஷுலி ஆர்யா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்தி தினம், விநாயகர் சதுர்த்தி ஆகியவற்றுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்தி தினமும் விநாயகர் சதுர்த்தியும் ஒரே நாளில் கொண்டாடப்படுவது ஒரு அரிய, மங்களகரமான தற்செயல் நிகழ்வு என்று கூறினார். தடைகளை நீக்குபவரான விநாயகப் பெருமான், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்து, அந்தப் பாதையில் உள்ள தடைகளையும் நீக்குவார் என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிராவின் பன்மொழி கலாச்சாரத்திற்கு மரியாதை செலுத்துவதாகக் கூறிய திரு ஷா, மராத்தி இங்கு மதிக்கப்படுகிறது எனவும், அது அவ்வாறே மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியவர் பிரதமர் திரு நரேந்திர மோடிதான் என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிரா வீர சாவர்க்கரின் பூமி என்று திரு அமித் ஷா கூறினார். சாவர்க்கர் தன் காலத்தின் மிகவும் கற்றறிந்த மொழியியலாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் என்று அவர் தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், 1949 செப்டம்பர் 14 அன்று இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டு, நன்கு சிந்தித்து முடிவு செய்தனர் என்றும் அவர் கூறினார். திரு நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து, அலுவல் மொழித் துறை எண்ணற்ற மைல்கற்களை எட்டியுள்ளது என்று திரு அமித் ஷா தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, தொடக்கக் கல்வியில் தாய்மொழியைக் கட்டாயமாக்கியுள்ளதை அவர் குறிப்பிட்டார். ஒரு குழந்தையின் தாய்மொழியைக் கற்காமல் ஒரு முழுமையான தனிநபராக வளர முடியாது எனவும். ஒருவரின் நிலம், மொழி, நம்பிக்கை, பாரம்பரியங்கள், கலாச்சாரம், விழுமியங்கள் மீதான பற்று தாய்மொழியின் மூலமே சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாய் மொழியுடன், மற்றொரு இந்திய மொழியைக் கற்பது சிறப்பானது என்று திரு அமித் ஷா கூறினார். இந்திய மொழிகளைக் கற்பதை எதிர்ப்பவர்கள், அவர்கள் எவ்வளவு பெரிய தவறைச் செய்கிறார்கள் என்பதை உணர்வதில்லை என்று அவர் கூறினார். குழந்தைகள் இரண்டாவது இந்திய மொழியைக் கற்பதன் மூலம், ஒரு குழந்தை தானாகவே “ஒரே பாரதம், சிறந்த பாரதம்” என்ற இலக்குடன் இணைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். குழந்தைகள் தங்கள் தாய்மொழியைக் கற்பதோடு, மற்றொரு இந்திய மொழியையும் கற்றால், அவர்கள் இயல்பாகவே தங்கள் இந்திய அடையாளத்துடன் இணைந்து, குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, இந்தியாவிற்கு அர்ப்பணிப்புள்ள உண்மையான குடிமக்களாக மாறுவார்கள் என்று திரு அமித் ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310119®=48&lang=1
***
TV/PLM/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313357)
வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam