பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற திரு அனந்த் நாக்கிற்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 16 SEP 2026 6:13PM by PIB Chennai

புகழ்பெற்ற நடிகர் திரு ஆனந்த் நாக்கிற்கு  தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக திரு ஆனந்த் நாக்-ன் இயல்பான நடிப்பு, வியக்கத்தக்க பன்முகத்தன்மை, கலைத்திறன் ஆகியவை இந்தியத் திரையுலகிலும், குறிப்பாகக் கன்னடத் திரையுலகிலும் அழியாத முத்திரையைப் பதித்துள்ளதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தக் கௌரவம் பெற அவர் முழுமையாகத் தகுதி பெற்றுள்ளார் என்றும், இந்தியத் திரையுலகிற்கு திரு ஆனந்த் நாக்  ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்பை இது பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். இந்தச் சிறப்பான தருணத்தில் அந்தச் சிறந்த கலைஞருக்கு அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

தாதாசாகேப் பால்கே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கலைஞர் ஆனந்த் நாக் அவர்களுக்கு வாழ்த்துகள்.

பல தசாப்தங்களாக, அவரது இயல்பான நடிப்பு, பன்முகத்தன்மைஅபாரத் திறமை ஆகியவை இந்தியத் திரையுலகிலும், குறிப்பாகக் கன்னடத் திரையுலகிலும் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளன.

 

அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனித்துவமான ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் அவர் கொண்டு சேர்த்தார். உண்மையிலேயே மிகச்சிறந்த கலைஞரான அவருக்கு இது மிகவும் தகுதியான ஒரு கௌரவமாகும்.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310986&reg=3&lang=1

----

TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312066) வருகையாளர் எண்ணிக்கை : 7