மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

எதிர்காலத்தில் உலக அளவில் செமிகண்டக்டர் துறையில் இந்தியா 10 சதவீதப் பங்களிப்பைக் கொண்டிருக்கும் - மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 4:12PM by PIB Chennai

இந்தியாவின் செமிகண்டக்டர் தொழில்துறையை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வை குறித்து மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஊடகவியலாளர்களிடம் இன்று விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் செமிகான் 2.0 திட்டத்தின் 6 முக்கிய அம்சங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இது இந்தியாவின் செமிகண்டக்டர் வடிவமைப்பில், உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

இத்திட்டம் முதலாவது செமிகான் இந்தியா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு  கட்டமைக்கப்பட்டுள்ளது. சிப் வடிவமைப்பு, உற்பத்தி, சிப்பமிடுதல் முதல் உபகரணங்கள், மூலப்பொருட்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு வரையிலான செமிகண்டக்டர் சூழலுக்கு நிதி, உள்கட்டமைப்பு ஆதரவை இது வழங்குகிறது.

செமிகண்டக்டர் விநியோக முறையின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதன் மூலமும்முக்கியத் துறைகளில் தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை அமைப்பதன் மூலமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், பாதுகாப்பையும் வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இது 10 பிரிவுகளை உள்ளடக்கிய ஆறு அம்சங்கள் மூலம் செயல்படும்.

வடிவமைப்புஇயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள்மேலும் பல உற்பத்தி திறன்களை அமைத்தல்தொழில்துறையை மேலும் வலுப்படுத்துதல்ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுதிறன் மேம்பாடு ஆகியவை 6 அம்சங்களாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அஸ்வினி வைஷ்ணவ், 10 ஆண்டுகளில் 85,000 செமிகண்டக்டர் பொறியாளர்களை உருவாக்கும் தனது இலக்கை நாடு  நான்கே ஆண்டுகளில் அடைந்துள்ளதாக கூறினார். தற்போது, மேலும் ஒரு லட்சம் பொறியாளர்களை உருவாக்கும் புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆண்டுகளில்உலகளாவிய செமிகண்டக்டர் தொழில்துறை சந்தையில் சுமார் 10 சதவீதம் இந்தியாவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அமைச்சர், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏற்கனவே 250-க்கும் மேற்பட்ட சிப்புகளை வடிவமைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304963&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305160) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada