தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஐஐசிடி, நெட்ஃபிலிக்ஸ் இணைந்து அடுத்த தலைமுறை இந்தியக் கதைப் படைப்பாளர்ளுக்கு ஆதரவு
இடுகை இடப்பட்ட நாள்:
26 AUG 2026 12:40PM by PIB Chennai
இந்திய படைப்பாக்கத் தொழில்நுட்ப நிறுவனமான ஐஐசிடி-ம், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனமும் இணைந்து, ஓராண்டுப் பட்டயப் பயிற்சித் திட்டங்கள் இரண்டையும், ஆறு மாத சான்றிதழ் திட்டங்கள் நான்கையும் உள்ளடக்கிய ஆறு தொழில்முறைப் படிப்புகளை நடத்துகின்றன. இத்திட்டத்தில் 100 மாணவர்களுக்கு 80% வரை நிதியுதவி வழங்கும் கல்வி உதவித்தொகை அம்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் உள்ள ஆறு படிப்புகள்:
பட்டயப் படிப்பு (டிப்ளமோ)
* இன்டராக்டிவ் காமிக்ஸ் & சீக்வென்ஷியல் ஆர்ட்ஸ்
* விஷுவல் எஃபெக்ட்ஸ் மாஸ்டரி
சான்றிதழ் படிப்புகள் :
* விர்ச்சுவல் ஆர்ட் கன்டென்ட் கிரியேஷன்
* மீடியா டெக் வொர்க்ஃப்ளோ
* ஆர்ட் ஆஃப் கேரக்டர் அனிமேஷன்
* இ-ஸ்போர்ட்ஸ் & கேமிங் மேனேஜ்மென்ட்
2026 ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி, நெட்ஃபிலிக்ஸ் இணை தலைமைச் செயல் அதிகாரி திரு டெட் சரண்டோஸ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் கதை சொல்லும் வளமான பாரம்பரியமும், அபாரமான படைப்பாற்றல் திறமையாளர்களும் உள்ளனர் என்றும், உள்ளடக்க உருவாக்கத்திற்கான உலகளாவிய மையமாக நமது நாட்டின் நிலையை வலுப்படுத்தலாம் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கல்வி உதவித்தொகைகள் இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கும் பணிபுரியும் நிபுணர்களுக்கும் வழங்கப்படும். பாடத் திட்டங்கள் உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளரும், ஐஐசிடி தலைவருமான திரு சஞ்சல் குமார் கூறுகையில், இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம் ஒரு திருப்புமுனையான நிலையில் உள்ளது என்றார். கதைகள் உருவாக்கப்படும் விதத்தை தொழில்நுட்பம் மாற்றியமைக்கும்போது, அடுத்த தலைமுறை திறமையாளர்களை உருவாக்கும் நிறுவனங்களும் அதற்கேற்ப பரிணமிக்க வேண்டும் என்று அவர் கூறினார். இத்தகைய ஒத்துழைப்புகள், தொழில் துறை அறிவை வகுப்பறைக்குக் கொண்டு வந்து, இந்தியாவின் திறமையாளர்களை நாளைய படைப்பாற்றல் பணியாளர்களாக வளர்க்க உதவும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303457®=3&lang=1
(Release ID: 2303457)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303523)
வருகையாளர் எண்ணிக்கை : 89
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Punjabi
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Kannada
,
Malayalam