கலாசாரத்துறை அமைச்சகம்
போபாலில் பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் நிறைவு போபால் பிரகடனம் ஏற்பு
प्रविष्टि तिथि:
08 AUG 2026 1:54PM by PIB Chennai
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தில் இன்று (08.08.2026) போபாலில் நடைபெற்ற 11-வது பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டம், கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு கட்டமைப்பை வழங்கும் போபால் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதோடு நிறைவடைந்தது.
இந்தியாவின் தலைமையின் கீழ் பிரிக்ஸ் கலாச்சாரப் பிரிவு, மூன்று கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டங்களை நடத்தியது. முதல் கூட்டம் 2026 ஏப்ரல் 29, 30 தேதிகளில் இணையவழியாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது கூட்டம் 2026 ஜூன் 4, 5 தேதிகளில் வாரணாசியிலும், மூன்றாவது கூட்டம் 2026 ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் போபாலிலும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இன்று (08.08.2026) நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியா உட்பட 14 நாடுகள் பங்கேற்றன. இதில் 10 பிரிக்ஸ் உறுப்பு நாடுகளும் 4 கூட்டாளர் நாடுகளும் அடங்கும். பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் பங்கேற்றன. எகிப்து இக்கூட்டத்தில் இணையவழியாக இணைந்தது. பெலாரஸ், கியூபா, கஜகஸ்தான், தாய்லாந்து ஆகியவை கூட்டாளர் நாடுகளாக பங்கேற்றன. மொத்தம் 55 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
உரையாடல்களைச் செயல்முறைகளாக மாற்றுவதற்கும், கலாச்சாரத் துறையில் நிறுவன ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கும், இந்தியாவின் முதன்மையான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கலந்தாய்வுகள் வழிநடத்தப்பட்டன. இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போபால் பிரகடனமானது, கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது. இதில் வழிமுறைகள், அனுபவங்கள், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வது, படைப்பாளிகளுக்கு ஆதரவளிப்பது, டிஜிட்டல் கருவிகள் மூலம் சந்தை அணுகலுக்கான விரிவான வாய்ப்புகள் ஆகியவை அடங்கும். மேலும் இது, யுனெஸ்கோவின் பன்னாட்டுப் பரிந்துரைகள், மூல ஆய்வு, கலாச்சாரச் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைத்தல் ஆகியவற்றில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கு வழிவகை செய்கிறது.
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் ஒரு முக்கிய கலாச்சார அங்கமாக, 2026 ஆகஸ்ட் 6, 7 தேதிகளில் போபாலில் இரண்டு நாட்கள் பிரிக்ஸ் கலாச்சார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், கூட்டாளர் நாடுகள் பங்கேற்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296478®=3&lang=1
***
(Release ID: 2296478)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2296584)
आगंतुक पटल : 11