ஜவுளித்துறை அமைச்சகம்
தேசிய கைத்தறி தினமான ஆகஸ்ட் 7 அன்று குடியரசுத்தலைவர் 'கைத்தறி விருதுகள் 2025'-ஐ வழங்கவுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 AUG 2026 6:53PM by PIB Chennai
2026 ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டங்களின்போது, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, கைத்தறி விருதுகளை வழங்குவார். இந்த நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், முக்கிய பிரமுகர்கள், கைத்தறித் துறைப் பிரதிநிதிகள், தலைசிறந்த நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் இதர விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்தியாவின் செழுமையான கைத்தறி மரபுகளின் பாதுகாப்பு, ஊக்குவிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக, மொத்தம் 22 பேர் கவுரவிக்கப்படவுள்ளனர். இவர்களில் மூவருக்கு சந்த் கபீர் கைத்தறி விருதும், 19 பேருக்கு தேசிய கைத்தறி விருதும் வழங்கப்படும்.
கைத்தறித் துறையில் நெசவு, புத்தாக்கம், வடிவமைப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல் முயற்சிகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கான 'சந்த் கபீர் கைத்தறி விருதுகள்' மற்றும் 'தேசிய கைத்தறி விருதுகள் 2025'-ஐப் பெறுவோரை ஜவுளி அமைச்சகம் அறிவித்துள்ளது. (https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc202684944201.pdf)
இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தை கணிசமாக வலுப்படுத்தியதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் அதன் போட்டித்தன்மையையும் மேம்படுத்திய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைக் கவுரவிக்கும் வகையில், தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டங்களின்போது இந்த விருதுகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294494®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2295888)
வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam