தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சட்டவிரோத, வெறுக்கத்தக்க உள்ளடக்கம் இல்லாத இணையவழி சேவையை உறுதி செய்வதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது - மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

प्रविष्टि तिथि: 05 AUG 2026 5:08PM by PIB Chennai

மகளிர், குழந்தைகள் உட்பட அனைத்து பயனர்களுக்கும் வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகமான, பொறுப்புமிக்க இணையதள சேவையை உறுதி செய்வதை அரசின் கொள்கைகள் நோக்கமாக கொண்டுள்ளன.  இந்தியாவில் உள்ள இணையதளம் எந்தவித சட்டவிரோத உள்ளடக்கம் அல்லது தகவல்கள் குறிப்பாக ஆபாச மற்றும் வெறுக்கத்தக்க உள்ளடக்கங்கள் இல்லாததை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் மின்னணு ஊடக நெறிமுறைகள்) விதிகள் 2021 ஆகியவை மின்னணு தளத்திலுள்ள சட்டவிரோத, தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்களை கையாள்வதற்கு விரிவான கட்டமைப்பை வழங்குகின்றன. அத்துடன் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கான இடைநிலை நிறுவனங்களின் மீது தெளிவான கடமைகளை விதிக்கின்றன.

டீப்ஃபேக் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் உட்பட செயற்கையாக உருவாக்கப்படும் தகவல்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தகவல் தொழில்நுட்ப விதிகளை திருத்தி ஒழுங்குமுறை கட்டமைப்பை மத்திய அரசு 2026 பிப்ரவரி 10 அன்று வலுப்படுத்தியது.

இத்தகவலை, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294949&reg=3&lang=1

****

TV/IR/SU/SH

 


(रिलीज़ आईडी: 2295230) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam