சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 05 AUG 2026 12:27PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் அத்துறைக்கான அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் இன்று நடைபெற்றது.  மனிதர்கள்-வனவிலங்குகள் இடையேயான மோதலைக் குறைத்து நீடித்த இணக்கமான வாழ்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது இக்கூட்டத்தின் நோக்கமாகும்.  இதில், மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள், அமைச்சக உயரதிகாரிகள், மாநிலங்களின் முதன்மை வனப் பாதுகாவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக 2025 டிசம்பர் 18 அன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.  மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொண்ட ஆலோசனைகளும் இதில் அடங்கும்.  பல்வேறு மாநிலங்களில் மனிதர்கள்-யானைகள் இடையேயான மோதல் அதிகமாகக் காணப்படுகிறது என்றும் புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காண்டாமிருகங்கள், காட்டுப் பன்றிகள், காட்டு எருமைகள் உள்ளிட்ட பிறவகை விலங்குகளுடனான மோதல்களை எதிர்கொள்வதற்கு அந்த இடத்திற்கு தேவையான குறிப்பிட்ட மேலாண்மை அணுகுமுறைகள் தேவை என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294698&reg=3&lang=1

***

VJ/PD/IR/SU/KR

 


(रिलीज़ आईडी: 2294848) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada , Malayalam