பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் தேசிய சிறார் விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கு கடைசி தேதி ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு

प्रविष्टि तिथि: 31 JUL 2026 2:03PM by PIB Chennai

பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் எனப்படும் தேசிய சிறார்  விருதுக்கான பரிந்துரை நடைமுறைகள்தேசிய விருதுகள் இணையதளம் (https://awards.gov.inமூலம் 01 ஏப்ரல், 2026 அன்று தொடங்கியது.

பெண்கள்குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்இணையவழிப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை, 31 ஜூலை 2026 என ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடைசி தேதி 15 ஆகஸ்ட் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

வீரம்சமூக சேவைசுற்றுச்சூழல்விளையாட்டுகலை, கலாச்சாரம் அறிவியல்தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறப்பான சாதனைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் வசிக்கும் இந்தியக் குடிமகனாக உள்ள, 5 வயதுக்கு மேற்பட்ட, 18 வயதுக்கு மிகாத (31 ஜூலை, 2026 அன்று) எந்தவொரு சிறாரும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர் ஆவார். சுய-பரிந்துரைகள்பிறருக்கான பரிந்துரைகள் உட்பட அனைத்துப் பரிந்துரைகளும் தேசிய விருதுகள் இணையதளம் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்குhttps://awards.gov.in என்ற தேசிய விருதுகள் இணையதளத்தைப் பார்வையிடவும்.

***

SS/PLM/RJ/SE


(रिलीज़ आईडी: 2292729) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Punjabi , Gujarati , Kannada , Malayalam