பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம், உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2026 12:17PM by PIB Chennai
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் என்பது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான சார்பைக் குறைப்பதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான முக்கிய திட்டமாகும். அதேவேளையில் விவசாயிகளின் வருவாயையும் இது அதிகரிக்கிறது. சமீபத்திய சில தகவல்கள் இத்திட்டத்தைப் பற்றி முழுமையற்ற, தவறான தகவல்களைப் பரப்பியுள்ளன. இது தொடர்பான சில விளக்கங்கள் உண்மையான நிலையை எடுத்துரைக்கின்றன.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் ஒரு தானியம் கூட எத்தனால் உற்பத்திக்குத் திருப்பி விடப்படுவதில்லை.
உணவு, பொது விநியோகத் துறையால் சான்றளிக்கப்பட்ட உபரி மட்டுமே எத்தனால் உற்பத்திக்கு அங்கீகரிக்கப்படுகிறது.
உண்மையில் எத்தனால் திட்டத்தில் பயன்படுத்தப்படுபவை, சேதமடைந்த தானியங்கள், உடைந்த அரிசி, மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவு தானியங்கள் ஆகியவை மட்டுமே ஆகும்.
இது ஏழைகளிடமிருந்து உணவைப் பறிப்பது அல்ல; இது கழிவுகளைச் செல்வமாக மாற்றி, இறக்குமதியைக் குறைத்து, இந்திய விவசாயிகளின் கைகளில் அதிகப் பணத்தைக் கொடுக்கிறது.
இந்திய கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 135 அமெரிக்க டாலராக உயர்ந்தபோது, தில்லியில் எத்தனால் கலக்கப்படாத பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் ரூ.125 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், நுகர்வோர் ஒரு லிட்டருக்கு ரூ.94.77 மட்டுமே செலுத்தினர். ஏனெனில், ஒவ்வொரு லிட்டரிலும் 20% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எத்தனால் ஆகும். இது, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பயன்பட்டுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தால் ரூ.1.97 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.
316 லட்சத்திற்கும் மேற்பட்ட மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றாக எத்தனால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
950 லட்சத்திற்கும் மேற்பட்ட மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.1.66 லட்சம் கோடிக்கும் மேல் பணம் வழங்கப்பட்டு, விவசாய விளைபொருட்களுக்கு ஒரு நிலையான உள்நாட்டுச் சந்தை உருவாக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292225®=3&lang=1
***
SS/PLM/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2292372)
வருகையாளர் எண்ணிக்கை : 130
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Khasi
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam