தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புற டிஜிட்டல் படைப்பாளிகளை ஊக்குவிக்க 'ஜெம்ஸ் ஆஃப் இந்தியா' போட்டி: மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தொடங்கியது

प्रविष्टि तिथि: 21 JUL 2026 1:52PM by PIB Chennai

மத்திய தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் நாட்டின் படைப்பாற்றல் துறையை வலுப்படுத்தவும்வளர்ந்து வரும் ஆரஞ்சுப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் சோதனை அடிப்படையில் 'ஜெம்ஸ் ஆஃப் இந்தியாபோட்டியை இன்று தொடங்கியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் டிஜிட்டல் படைப்பாளிகளைக் கண்டறிந்துஅவர்களை ஊக்குவித்து வளர்க்கும் நோக்கத்துடன் இந்த தேசிய அளவிலான முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்திய வேவ்ஸ் ஒடிடி தளத்தின் ஒரு பகுதியான 'மைவேவ்ஸ்என்ற பொதுமக்களுக்கான படைப்பாளர் தளத்தின் அடிப்படையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. படைப்பாளர்கள் தங்களின் சொந்த மாவட்டங்களின் தனித்துவமான கலாச்சாரம்பாரம்பரியம்வரலாறுசாதனைகளை முதல் நிமிடங்கள் வரையிலான குறும்படங்கள் மூலம் வெளிப்படுத்தலாம்.

ந்த போட்டியில் பங்கேற்பதற்கு 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இத்திட்டம் முதல் கட்டமாக அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி டாமன் டையூ, கோவா, லடாக் ஆகிய பகுதிகளில் தொடங்கப்படுகிறது. பிரசார் பாரதி, மை பாரத் அமைப்பு, யூடியூப், மெட்டா போன்ற முன்னணி டிஜிட்டல் தளங்களுடன் ஒருங்கிணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட அளவில் தலா 50,000 ரூபாய் மதிப்பிலான 20 பரிசுகளும், மாநில அளவில் தலா 2 லட்சம் ரூபாய் பரிசும், தேசிய அளவில் 5 லட்சம் ரூபாய் பரிசுகளும் வழங்கப்படும். இந்த முதல் கட்டத்தில் கிடைக்கப்பெறும் அனுபவங்களின் அடிப்படையில் விரைவில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் 'ஜெம்ஸ் ஆஃப் இந்தியாபோட்டி விரிவுப்படுத்தப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286946&reg=3&lang=1

 

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2287370) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam