பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இணையதளப் பாதுகாப்பு, முக்கிய தொழில்நுட்பங்கள், விநியோக நடவடிக்கைகள் ஆகியவற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒத்துழைப்பு

प्रविष्टि तिथि: 09 JUL 2026 11:04AM by PIB Chennai

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும்நமது விரிவான உத்திசார் ஒத்துழைப்புஇணையதளப் பாதுகாப்புஅது சார்ந்த முக்கிய தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு -2020 ஆகியவற்றின் அடிப்படையில்முக்கிய தொழில்நுட்பங்களில் ஒரு நிலையான ஒத்துழைப்பு அம்சத்தை உருவாக்கியுள்ளன.

விநியோக நடவடிக்கைகள்முக்கிய தொழில்நுட்பம்இணையதளப் பாதுகாப்பு ஆகியவை பொருளாதார வளர்ச்சியை இயக்குகின்றன. இவை தேசியப் பாதுகாப்பிற்கு முக்கிமானவை. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இவற்றில் தங்களின் அடித்தளங்களை வலுப்படுத்தி, 'இணைய பாதுகாப்புமுக்கிய தொழில்நுட்பங்கள்விநியோக நடவடிக்கைகள் ஆகியவை மீதான ஆஸ்திரேலியா-இந்தியா ஒத்துழைப்பு' 2020-ன் கீழ் தங்களின் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உள்ளன.

இணைய பாதுகாப்புமுக்கிய தொழில்நுட்பங்கள்விநியோக நடவடிக்கைகள் ஆகியவை மீதான ஆஸ்திரேலியா-இந்தியா ஒத்துழைப்பின் நோக்கம்தேசியபிராந்தியப் பாதுகாப்பில் நமது பொதுவான ஆர்வத்தை அதிகரிப்பதாகும். நமது நட்பு நாடுகளுக்கு மேம்பட்ட டிஜிட்டல் சேவைகளை வழங்குவதுமுக்கிய விநியோக நடவடிக்கைகளை மேலும் நிலைத்தன்மை கொண்டதாக மாற்றுவதுஉலகளாவிய இணைய பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.

 

ஒத்துழைப்பிற்கான முக்கிய தூண்கள்:

தனியார் துறைபல்கலைக்கழகங்கள்ஆராய்ச்சி நிறுவனங்கள்அரசு முகமைகள் ஆகயவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அடையாளம் காணும். இது இரு அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்தும். புதிய தொழில்நுட்பங்களில் முதலீட்டை அதிகரித்துஅறிவுசார் சொத்துரிமையை பொருளாதார வளர்ச்சியாக மாற்ற வழி வகுக்கும்.

தூண் 1: விநியோக நடவடிக்கைகளின் உறுதித்தன்மையும்பன்முகப்படுத்தலும்:

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும்விதிகள் அடிப்படையிலான இருதரப்பு தொழில்நுட்ப வர்த்தகம்விநியோக நடவடிக்கைகளை ஆழப்படுத்துதல் உள்ளிட்டவற்றின் மூலம்நமது வளர்ந்து வரும் தொழில்நுட்பத் தொழில்களை ஆதரிப்பதற்காகநம்பகமான விநியோக நடவடிக்கைகளை நோக்கிப் பணியாற்றும்.

தூண் 2: முக்கிய தொழில்நுட்பம்.

செயற்கை நுண்ணறிவுவிண்வெளி தொழில்நுட்பங்கள்தொலைத்தொடர்புஉயிரி தொழில்நுட்பம்மேம்பட்ட பொருட்கள் போன்ற முக்கியத் துறைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்ட முக்கிய தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும்புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறியவும் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இணைந்து செயல்படும்.

தூண் 3: இணையப் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இணையடிஜிட்டல் களத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த இணைந்து செயல்படும். இதில் இணையக் குற்றங்களைத் தடுப்பதுதீங்கிழைக்கும் இணையச் செயல்பாடுகளைத் தடுப்பதுஇணைய தொழில்நுட்பப் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான அறிவையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்வதுமுக்கியமான தேசிய உள்கட்டமைப்பைப் பாதுகாப்பது ஆகியவை அடங்கும்.

தூண் 4: டிஜிட்டல் மீள்தன்மை

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இந்தோ-பசிபிக் முழுவதும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆதரிக்க நம்பகமான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்க முயற்சி மேற்கொள்ளும். இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு கொள்கைகள் குறித்து இந்தோ-பசிபிக் நாடுகளில் புதிய ஒத்துழைப்புகள் ஏற்படுத்தப்படும்.

தூண் 5: பாதுகாப்பு ஆராய்ச்சி ஒத்துழைப்பு

பாதுகாப்பு சவால்கள்அதில் திறன் மேம்பாடு ஆகியவை குறித்த பகிரப்பட்ட புரிதலை மேம்படுத்துவதற்காகபாதுகாப்பு ஆராய்ச்சியில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இணைந்து செயல்படும். கடந்தகால கூட்டு ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டுநமது பகிரப்பட்ட நலன்களுக்கு ஏற்ப எதிர்காலத் திட்டங்கள் வடிவமைக்கப்படும். நமது பாதுகாப்பு அறிவியல் அமைப்புகளுக்கு இடையேயான பரிமாற்றங்கள் அதிகரிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282692&reg=3&lang=1

 

***

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2282955) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam