பிரதமர் அலுவலகம்
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் நடந்த விபத்துக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 APR 2026 9:50AM by PIB Chennai
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் நடந்த விபத்து குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
"ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் நடந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்”.
***
(Release ID: 2252402)
SS/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2281470)
வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam