பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புத்தாண்டு மற்றும் இந்தியாவின் கலாச்சார விழுமியங்களின் முக்கியத்துவம் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 14 APR 2026 12:47PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

இக்கட்டுரை, இந்தியாவின் பன்முகத் தன்மை வாய்ந்த பண்டிகைகளின் செழுமையை எடுத்துரைக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார். அத்துடன் இக்கட்டுரை பாரம்பரியம், குடும்பம், ஆன்மீகம், ஒழுக்கமான வாழ்க்கை முறை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு பண்டிகையாக புத்தாண்டு திகழ்கிறது என்ற சாராம்சத்தை வலியுறுத்தி, மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இளைய தலைமுறையினர், 'ஒரே பாரதம்' என்ற லட்சியத்துடன் முன்னேறி, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அந்தக் கட்டுரை வெளிப்படுத்துவதாகத் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தியாவின் பன்முகத் தன்மை வாய்ந்த பண்டிகைகளின் செழுமையை எடுத்துரைக்கும் வகையில், குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன் பாரம்பரியம், குடும்பம், ஆன்மீகம், ஒழுக்கமான வாழ்க்கை முறை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் பண்டிகையாக அதன் சாராம்சத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

இளம் தலைமுறை 'ஒரே பாரதம்' என்ற லட்சியத்துடன் முன்னேறி, 2047-ம் ஆண்டுக்குள் உன்னத பாரதம், வளர்ச்சியடைந்த பாரதம் ஆகிய இலக்குகளை அடைவதற்குப் பங்களிப்பார்கள் என்று இந்தக் கட்டுரையில் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்."

****

(Release ID: 2251802)

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2277858) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam