பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹங்கேரி நாட்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற திரு பீட்டர் மாக்யாருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 13 APR 2026 11:40AM by PIB Chennai

ஹங்கேரி நாட்டுத் தேர்தலில் திரு பீட்டர் மாக்யார் மற்றும் டிஸ்ஸா கட்சி  பெற்ற மகத்தான வெற்றிக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி  தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்தியாவும் ஹங்கேரியும் ஆழமான நட்புறவு, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் நீடித்த பரஸ்பர மரியாதை ஆகியவற்றால் பிணைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இரு பிராந்திய மக்களின் பகிரப்பட்ட செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக இன்றியமையாத இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உத்திசார் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்லவும் திரு மாக்யாருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக திரு மோடி தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது:

மகத்தான தேர்தல் வெற்றிக்காக  திரு பீட்டர் மாக்யார்-க்கும், டிஸ்ஸா கட்சிக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இந்தியாவும் ஹங்கேரியும் ஆழமான நட்புறவு, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் நீடித்த பரஸ்பர மரியாதையால் பிணைக்கப்பட்டுள்ளன. நமது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், நமது மக்களின் பகிரப்பட்ட செழிப்பு மற்றும் நல்வாழ்விற்கான இன்றியமையாத இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உத்திசார் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்லவும் உங்களுடன் இணைந்துப்  பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.”

****

(Release ID: 2251436)

SS/RB/RJ


(रिलीज़ आईडी: 2277787) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam