பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

அருணாச்சல பிரதேசத்தின் கம்லே, கிரா தாடி மற்றும் குருங் குமே மாவட்டங்களில் ₹26,069.50 கோடி செலவில் 1720 மெகாவாட் கமலா நீர்மின் திட்டத்தை அமைப்பதற்கான முதலீட்டு முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 08 APR 2026 4:26PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அருணாச்சல பிரதேசத்தின் கம்லே, கிரா தாடி, குருங் குமே ஆகிய மாவட்டங்களில் கமலா நீர்மின் திட்டத்தை  அமைப்பதற்காக 26,069.50 கோடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை 96 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1720 மெகாவாட் (8 x 210 மெகாவாட் & 1 x 40 மெகாவாட்) நிறுவப்பட்ட திறன் கொண்ட இந்தத் திட்டம், 6870 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இந்தத் திட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மின் விநியோக நிலையை வலுப்படுத்தும். இது உச்சபட்ச தேவை மேலாண்மைக்கு உதவுவதுடன், தேசிய மின்கட்டமைப்பு சமநிலைக்குப் பங்களிக்கும். அத்துடன் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வெள்ளப்பெருக்கையும் கட்டுப்படுத்தும். கமலா நீர்மின் திட்டம் தவிர, சுபன்சிரி லோயர் (2000 மெகாவாட்), திபாங் பல்நோக்குத் திட்டம் (2880 மெகாவாட்) போன்ற பிற நீர்மின் திட்டங்களும் அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டுமானத்தில் உள்ளன, மேலும் எட்டாலின் (3097 மெகாவாட்) திட்டத்தை தேசிய நீர் மின் திட்டக் கழக நிறுவனம் மேம்படுத்தவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250042&reg=3&lang=2

 

(Release ID: 2250042)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2274426) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada