பிரதமர் அலுவலகம்
'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்ச்சியில் தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
14 JUN 2026 8:05PM by PIB Chennai
பிரான்சில் நடைபெற்ற 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்ச்சியில் தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது:
“இந்தியாவுக்கு வாருங்கள்.
எங்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.
இந்தியாவில் வடிவமையுங்கள்,
இந்தியாவில் உருவாக்குங்கள்,
மேலும் உலகிற்கான தீர்வுகளைப் படைத்திடுங்கள்”.
“புதுமை என்பது இயற்கையிலேயே இந்தியாவின் இயல்பில் ஊறியுள்ளது.
இந்தியாவின் இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் புதுமைகளைப் படைத்து வருகின்றனர். அவர்கள் முக்கியமான உலகளாவிய சவால்களுக்கும் தீர்வுகளைக் கண்டறிந்து வருகின்றனர்”.
“இன்று உலகம் நம்பகமான, அனைவரையும் உள்ளடக்கிய, மனிதனை மையமாகக் கொண்ட, உலக நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை எதிர்நோக்கியுள்ளது.
இத்தகைய சூழலில், இந்தியாவின் முன்னுரிமை தெளிவாக உள்ளது... மனிதகுலத்திற்கான தொழில்நுட்பம், மனிதனை மையமாகக் கொண்ட புத்தாக்கம் என்பது தான் அது”.
“இந்தியா அதிகமான அளவிலும் வேகத்திலும் புதுமைகளைப் படைக்கிறது.
இந்தியா நிலையான எதிர்காலத்திற்காகப் புத்தாக்கங்களில் ஈடுபடுகிறது.
மேலும், இந்தியா ஒட்டுமொத்த உலகிற்காகவும் புதுமைகளைப் படைக்கிறது”.
(Release ID: 2272732)
***
SS/BR/KR
(रिलीज़ आईडी: 2273971)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam