உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீண்ட பதவிக் கால சாதனை - பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

प्रविष्टि तिथि: 10 JUN 2026 3:43PM by PIB Chennai

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுநாட்டின் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பிரதமராக மக்களுக்குச் சேவை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை எட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மதிய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுநாட்டு மக்களுக்கு தொடர்ச்சியாகநீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்து சேவை செய்யும் வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். திரு நரேந்திர மோடியின் இந்த 12 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவில் சுயமரியாதையின் மறுமலர்ச்சிகலாச்சார மறுமலர்ச்சிகாலனித்துவ மனப்பான்மையிலிருந்து தேசத்தின் விடுதலை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இந்த 12 ஆண்டுகளில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது,. புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதுதாய்மொழியில் மருத்துவம்பொறியியல் கல்விக்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் தற்சார்பு இந்தியா என்பது ஒவ்வொரு இந்தியரின் தீர்மானமாக மாறியது. இந்த 12 ஆண்டுகளில்நாட்டின் எல்லைகள் வலுவாகப் பாதுகாக்கப்பட்டன. காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. ராமர் கோயில் கட்டப்பட்டது. ஒவ்வொரு பயங்கரவாத சம்பவத்திற்கும் தகுந்த பதிலடி கொடுப்பதன் மூலம் நக்சலிசமும் பயங்கரவாதமும் உறுதியாகக் கையாளப்பட்டன. அதே சமயம்தேசத்தின் கூட்டு பலமானதுதாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டுதனது பாரம்பரியம்கலாச்சாரம்திறன்கள் ஆகியவற்றில் பெருமிதம் கொள்ளக் கற்றுக்கொண்டது. நாட்டு மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும்அவர்கள் இழந்த சுயமரியாதையையும் கண்ணியத்தையும் மீட்டெடுத்ததும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனையாகும். இப்போதுபுதிய இந்தியா ஒவ்வொரு உலகளாவிய தளத்திலும் நம்பிக்கையுடன் தனது அடையாளத்தை நிலைநாட்டி வருகிறது. திறமையானவலிமையானநல்ல மாற்றத்துடன் கூடிய இந்தியாவின் எழுச்சியை உலகம் கண்டு வருகிறது."

மற்றொரு பதிவில்உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியிருப்பதாவது:

"பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமை என்பது உறுதியிலிருந்து வெற்றிக்கும்சேவையிலிருந்து நல்லாட்சிக்கும் இட்டுச்செல்லும் பயணத்திற்கான அடையாளச் சின்னமாகும். அவரது தலைமையின் கீழ்இந்தியா தன்னம்பிக்கைவளர்ச்சிஉலகளாவிய கௌரவம் ஆகியவற்றில் புதிய அளவுகோல்களை நிறுவியுள்ளது 

***

(Release ID : 2271125) 

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2271347) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam