பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
இந்தியாவின் முதலாவது கலப்பு எரிபொருளில் இயங்கும் பயணிகள் வாகனம் அறிமுகம்
प्रविष्टि तिथि:
04 JUN 2026 4:02PM by PIB Chennai
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, மாருதி சுசுகி நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதலாவது கலப்பு எரிபொருளில் (பிளெக்ஸ்-பியூவல்) இயங்கும் பயணிகள் வாகனத்தை புதுதில்லியில் இன்று அறிமுகப்படுத்தினார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான எத்தனால்-பெட்ரோல் கலவையில் இயங்கும் இந்த அதிநவீன வாகனங்கள் புதிய சுற்றுச்சூழல் புரட்சியை ஏற்படுத்தும் என்று திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும், மத்திய அரசின் கொள்கை முடிவுகளால் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தும் வகையில், நாட்டின் எத்தனால் கலப்பு விகிதம் 2013-14-ம் ஆண்டில் 1.5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததில் இருந்து, தற்போது திட்டமிட்ட காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே 20 சதவீத இலக்கை எட்டியுள்ளது. நாட்டில் விற்பனையாகும் புதிய வாகனங்களில் 50 சதவீதம் பிளெக்ஸ்-பியூவல் வாகனங்களாக மாறினால், அது விவசாயிகளுக்கு 12,403 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை அளிப்பதோடு, கார்பன் உமிழ்வை 66.4 லட்சம் மெட்ரிக் டன் வரை குறைக்கும். நித்தி ஆயோக் அமைப்பு இந்த வாகனங்களை ‘பூஜ்ஜிய உமிழ்வு’ வாகனங்கள் என்று அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியுள்ளது. டெல்லி, மும்பை, புனே உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இதற்கான பிரத்யேக எரிபொருள் விற்பனை நிலையங்களை 2026 டிசம்பருக்குள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார் .
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268889®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2269053)
आगंतुक पटल : 14