பிரதமர் அலுவலகம்
மேற்காசியாவில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கான பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
प्रविष्टि तिथि:
01 APR 2026 10:04PM by PIB Chennai
மேற்காசியாவில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் மேலும் முன்முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்கும் எண்.7, லோக் கல்யாண் மார்க்-ல் உள்ள தமது இல்லத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவின் சிறப்புக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரவை குழுக் கூட்டத்தின் 2-வது சிறப்புக் கூட்டம் இதுவாகும். அப்போது பேசிய அமைச்சரவை செயலாளர் பெட்ரோலியப் பொருட்கள் குறிப்பாக எல்என்ஜி, எல்பிஜி ஆகியவற்றின் விநியோகம், போதிய மின்சார இருப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். பல்வேறு நாடுகளிலிருந்து எல்பிஜி, எல்என்ஜி கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உள்நாட்டு நுகர்வோருக்கான எல்பிஜி தொடர்ந்து அதே விலையில் நீடிப்பதாகவும் கள்ளச்சந்தை விற்பனை, பதுக்கல் ஆகியவற்றுக்கு எதிராக அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு இணைப்புகளை விரிவுபடுத்துவதற்கான முன்முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உச்சக்கட்ட கோடைகால மாதங்களில் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய 7 முதல் 8 ஜிகாவாட் திறன் கொண்ட எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு ஒருங்கிணைப்பு முறையிலிருந்து விலக்கு அளிப்பது, அனல் மின் நிலையங்களில் அதிக நிலக்கரியை வைப்பதற்காக சரக்கு ரயில் பெட்டியின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் வேளாண்மை, விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்துப் போன்ற பல்வேறு துறைகளில் எழுந்துள்ள சவால்களுக்காக மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், யூரியா உற்பத்தியை பராமரிப்பது, டிஏபி, என்பிகேஎஸ் உரங்களை விநியோகிப்பதற்காக வெளிநாட்டு விநியோகஸ்தர்களுடன் ஒருங்கிணைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் கண்காணிப்பு, சோதனைகள், கடும் நடவடிக்கை மூலம் உரங்களின் கள்ளச்சந்தை விற்பனை, பதுக்கல் ஆகியவற்றை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248071®=3&lang=2
***
SS/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2267986)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam