பிரதமர் அலுவலகம்
நக்சல் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் திரு அமித் ஷா மக்களவையில் ஆற்றிய உரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
30 MAR 2026 9:53PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நக்சல் தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து மக்களவையில் ஆற்றிய சிறப்பான உரையைப் பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்த உரையில் முக்கிய உண்மைகள், வரலாற்றுப் பின்னணி, கடந்த பத்து ஆண்டுகளில் அரசின் முயற்சிகள் ஆகியவை குறித்த விரிவான விவரங்கள் நிறைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளாக, பிற்போக்குத்தனமான மாவோயிச சித்தாந்தம் பல பிராந்தியங்களின் வளர்ச்சியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், இடதுசாரி தீவிரவாதம் எண்ணற்ற இளைஞர்களின் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதித்ததாகவும் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில், இந்த நக்சல் அச்சுறுத்தலை வேரோடு களைவதற்கு அரசு பாடுபட்டதோடு, நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வளர்ச்சியின் பலன்கள் சென்றடைவதையும் அரசு உறுதி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சியை வலுப்படுத்துவதிலும், அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்வதிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று பிரதமர் மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மக்களவையில் ஆற்றிய உரை, முக்கியமான உண்மைகள், வரலாற்றுப் பின்னணி, கடந்த பத்து ஆண்டுகளில் எங்களது அரசின் முயற்சிகள் ஆகியவற்றை எடுத்துரைத்த ஒரு மிகச்சிறந்த உரையாகும்.
பல ஆண்டுகளாக, பிற்போக்குத்தனமான மாவோயிச சித்தாந்தம் பல்வேறு பிராந்தியங்களின் வளர்ச்சியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இடதுசாரி தீவிரவாதம் எண்ணற்ற இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில், எங்களது அரசு இந்த நக்சல் அச்சுறுத்தலை வேரோடு களைவதற்கும், அதே நேரத்தில் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வளர்ச்சியின் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் பாடுபட்டுள்ளது. நாங்கள் நல்லாட்சியை மேலும் மேம்படுத்துவதிலும், அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்வதிலும் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்."
***
(Release ID: 2247120)
TV/PLM/KR
(रिलीज़ आईडी: 2267940)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam