பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் போர்பந்தரில் நடைபெறும் மாதவ்பூர் மேளாவுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 29 MAR 2026 10:23AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தின் போர்பந்தரில் நடைபெற்று வரும் மாதவ்பூர் மேளாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த உயிரோட்டமான கொண்டாட்டம் நமது பெருமைமிக்க கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுவதோடு, குஜராத்திற்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையிலான காலத்தால் அழியாத கலாச்சாரப் பிணைப்பையும் வலுப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விழா, 'ஒரே பாரதம் - உன்னத பாரதம்' என்ற உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு பாரம்பரியங்களை ஒன்றிணைக்கிறது என்றும் இந்த விழாவிற்கு வருகை தருமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஏப்ரல் 2022-ல் இடம்பெற்ற 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், மாதவ்பூர் மேளாவின் முக்கியத்துவம், நமது கலாச்சாரத்தில் அதன் பங்கு ஆகியவை குறித்துத் தாம் பேசியதையும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

குஜராத் மாநிலம் போர்பந்தரில் நடைபெற்று வரும் மாதவ்பூர் மேளாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த உயிரோட்டமான கொண்டாட்டம் நமது பெருமைமிக்க கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுவதோடு, குஜராத்திற்கும் வடகிழக்குப் பகுதிக்கும் இடையிலான காலத்தால் அழியாத கலாச்சாரப் பிணைப்பையும் வலுப்படுத்துகிறது.

இந்தத் திருவிழா, 'ஒரே பாரதம் - உன்னத பாரதம்' என்பதன் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு பாரம்பரியங்களை ஒன்றிணைக்கிறது. இந்த விழாவிற்கு வருகை தருமாறு மக்களை நான் அன்புடன் அழைக்கிறேன்!"

"ஏப்ரல் 2022-ல் இடம்பெற்ற மனதின் குரல் (#மன்கிபாத் )நிகழ்ச்சியில், மாதவ்பூர் மேளாவின் முக்கியத்துவம், நமது கலாச்சாரத்தில் அதன் சிறந்த பங்கு ஆகியவை குறித்து நான் பேசினேன். அதைக் கேளுங்கள்...

***

(Release ID: 2246605)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2267929) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam