பிரதமர் அலுவலகம்
தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
23 MAR 2026 8:29AM by PIB Chennai
தியாகிகள் தினத்தை முன்னிட்டு பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
தேசத்திற்காக உயிர்நீத்த இந்த மாபெரும் வீரர்களின் தியாகம், இந்தியர்களின் நினைவில் ஆழமாகப் பதிந்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இளம் வயதிலேயே இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர் என்றும் தெரிவித்தார். காலனி ஆதிக்கத்தின் வலிமையால் சற்றும் அஞ்சாமல், தங்கள் உயிரை விட தேசத்திற்கு முன்னுரிமை அளித்து, உறுதியுடன் தியாகத்தின் பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்தனர் என்றும், அவர்களின் நீதி, தேசபக்தி மற்றும் துணிச்சலான எதிர்ப்பு ஆகிய கொள்கைகள் இன்றும் எண்ணற்ற இந்தியர்களின் உள்ளத்தின் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டதாவது:
“இன்று, பாரதத் தாயின் வீர மைந்தர்களான பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரை நாம் மரியாதையுடன் தலைவணங்குகிறோம். தேசத்திற்காக அவர்கள் செய்த தியாகம், நமது நினைவில் என்றும் ஆழமாகப் பதிந்துள்ளது.
இளம் வயதிலேயே, அவர்கள் அபாரமான தைரியத்தையும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினர். காலனி ஆதிக்கத்தின் வலிமையால் சற்றும் தளராமல், தங்கள் உயிரை விட தேசத்திற்கு முன்னுரிமை அளித்து, உறுதியுடன் தியாகத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். நீதி, தேசபக்தி மற்றும் துணிச்சல் மிகுந்த எதிர்ப்பு குறித்த அவர்களது லட்சியங்கள் எண்ணற்ற இந்தியர்களின் உள்ளத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.”
***
(Release ID: 2243643)
SS/BR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2267812)
வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam