குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சிக்கிம் மாநில காவல்துறைக்கு ‘குடியரசுத் தலைவரின் காவல்துறைச் கொடியை’ குடியரசுத் தலைவர் வழங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAY 2026 12:25PM by PIB Chennai

சிக்கிம் மாநிலத் தலைநகர் கேங்டாக்கில் நடைபெற்ற விழாவில், அம்மாநில காவல்துறைக்கு ‘குடியரசுத் தலைவரின் காவல்துறை கொடியைகுடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (மே 28, 2026) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தச் சிறப்புமிக்க கௌரவத்தைப் பெற்றதற்காக, கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் சிக்கிம் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும், தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 1897-ம் ஆண்டில் சிக்கிம் காவல்துறை தொடங்கப்பட்டதிலிருந்து, அங்கு அமைதி, பாதுகாப்பு, நீதி ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இக்காவல்துறைப் படை அயராது பணியாற்றி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வு தமக்கு மகிழ்ச்சிஅளிப்பதாக உள்ளது என்று அவர்  தெரிவித்தார்.

இந்தியாவின் காவல்துறை அமைப்பில், நீண்ட கால காலனித்துவ ஆட்சியின் தாக்கம் வலுவாக வேறூன்றியுள்ளது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். காலனித்துவ ஆதிக்கக் காலத்தில், காவல்துறையின் முதன்மை நோக்கம், பொதுமக்களுக்குச் சேவை செய்வதாக இல்லாமல், அவர்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகவும், ஆளும் ஆட்சியாளர்களின் கட்டளைகளைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதாகவும் மட்டுமே இருந்தது. இதன் விளைவாக, காவல்துறை அமைப்பிற்குள் ஒரு 'காலனித்துவ மனப்பான்மை' வேரூன்றியது. இந்த மனப்பான்மையின் கீழ், பொதுமக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு மாறாக, அவர்களை ஆதிக்கம் செலுத்தி ஆட்சி செய்யும் மனநிலையே காவல்துறையினரிடையே மேலோங்கி இருந்தது. தற்போது அந்த மனப்பான்மை மாறி வருகிறது. நாட்டின் குடிமக்களுக்கு அதிகாரமளிக்க வேண்டுமெனில், இந்தக் காலனித்துவக் கண்ணோட்டத்தை முழுமையாகக் களைவது மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். அப்போதுதான், 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை அடைவதற்கான முயற்சியில் மக்கள் முழு மனதுடன் பங்களிக்க முடியும்.

காவல்துறை அமைப்பிற்குள் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து குடியரசுத் தலைவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். சாமானிய மக்கள் எவ்வித அச்சமுமின்றித் தங்கள் குறைகளைப் பதிவு செய்யும் வகையில், காவல்துறை அமைப்பு குடிமக்களுக்கு மிகவும் இணக்கமானதாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார். பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர் ஆகியோரிடம் உணர்வுபூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

காவல்துறையினர் குடிமக்களுக்கு நண்பனாகவும், வழிகாட்டிகளாகவும் பரிணமிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இத்தகைய கூட்டு மனப்பான்மையை ஏற்றுக்கொள்வதன் மூலம், பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும், இடையேயான நம்பிக்கை வலுப்பெறும். காவல்துறையினர் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் போது, அது சமூகத்தில் பாதுகாப்பு உணர்வை மேம்படுத்துவதுடன், சட்டத்தின் ஆட்சி மீதான மரியாதையையும் வலுவடையச் செய்யும். காவல்துறை அமைப்பின் நோக்கம் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதுடன், பாதுகாப்பான மற்றும் சமூக உணர்வுமிக்க ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதை நோக்கியும் விரிவடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சிக்கிம் மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பேணுவதில், சிக்கிம் மாநில காவல்துறை, குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது  என்பதைச் சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். தங்களின் தொழில்முறை நடத்தை மற்றும் குடிமக்களிடம் காட்டிய கனிவான அணுகுமுறை ஆகியவற்றின் மூலம், இது சிக்கிம் மாநில மக்களின் அன்பையும், மரியாதையையும் பெற்றுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266155&reg=3&lang=1

***

TV/SV/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2266255) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Nepali , Manipuri , Bengali , Gujarati , Malayalam