உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானில் எல்லைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2026 2:51PM by PIB Chennai

ராஜஸ்தானில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லை மாவட்டங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்மத்திய உள்துறைகூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் பிகானேரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர்பிகானேர்ஜெய்சால்மர்பார்மர்ஸ்ரீ கங்காநகர்பலோடி ஆகிய ஐந்து எல்லை மாவட்டங்களின் ஆட்சியர்கள்காவல்துறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ்சர்வதேச எல்லைகளில் பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்ய மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்பதை இந்தக் கூட்டம் வலியுறுத்தியது. எல்லைப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தஉள்ளூர் மக்கள்மாநில அரசுபாதுகாப்பு முகமைகளை உள்ளடக்கிய முப்பரிமாண பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

சர்வதேச எல்லையிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிற்குள் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் சட்டவிரோத கட்டுமானங்களையும் உடனடியாக அகற்ற அமைச்சர் உத்தரவிட்டார். எல்லைப் பாதுகாப்புப் படைமத்திய நேரடி வரிகள் வாரியம்போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் ஆணையம் ஆகிய அமைப்புகள் மாநில அரசுடன் இணைந்து தீவிரவாத ஊடுருவல்போதைப்பொருள் கடத்தல்சட்டவிரோத நிதி உதவிஎல்லை தாண்டிய குற்றங்களை ஒடுக்க கூட்டு உத்தியை வகுக்குமாறு அறிவுறுத்தினார்.

சைபர் குற்றங்களைத் தடுக்க '1930' உதவி எண்ணை திறம்பட பயன்படுத்தவும்மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும்துடிப்பான கிராமங்கள் 2.0 திட்டம் மூலம் எல்லைக் கிராமங்களில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் 100 சதவீதம் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்உள்கட்டமைப்பு வசதிகள்எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265791&reg=3&lang=1

***

SS/PD/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2265980) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Gujarati , Odia , Kannada