ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டம் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கிராமங்களுக்கு அதிகாரம் அளிக்கும் – திரு சிவ்ராஜ் சிங் சௌகான்

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAY 2026 3:00PM by PIB Chennai

இந்தியாவின் ஊரக வளர்ச்சி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக மத்திய அரசு இன்று வளரச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத மற்றும் வாழ்வாதார இயக்கத்தின் அமலாக்கம் குறித்த அறிவிக்கையை வெளியிட்டது. இச்சட்டம் 2026  ஜூலை 1 முதல், நாடு முழுவதுமாக அமலுக்கு வருகிறது.

இந்தச் சட்டம், கிராமப்புற ஏழைகள், தொழிலாளர் குடும்பங்கள், பெண்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் விவசாயிகளுக்குப் புது நம்பிக்கை, மேம்பட்ட வருவாய்ப் பாதுகாப்பு, பெரிய அளவிலான நிலையான வளர்ச்சி முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

இன்று போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வளர்ச்சியடைந்த  இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத மற்றும் வாழ்வாதார இயக்கம் சட்டம் தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், ஜூலை 1 முதல், கிராமப்புறங்களில் வேலை தேடும் தொழிலாளர்களுக்கு, முன்பு வழங்கப்பட்ட 100 நாட்கள் என்ற வேலைவாய்ப்பை விட அதிகரித்து, ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த இடைக்காலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்  அனைத்து விதிகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கட்டமைப்பின் கீழ் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மாநிலங்களுடன் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, புதிய சட்டத்திற்கான விதிகளை உருவாக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த மாற்றக் காலகட்டத்தில் எந்தவொரு தொழிலாளியும் வேலையிழப்புக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளதாக  அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259773&reg=3&lang=1

 

****

TV/IR/KPG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2259987) வருகையாளர் எண்ணிக்கை : 101
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam