பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசியாவில் நிலவும் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
21 APR 2026 6:09PM by PIB Chennai
மேற்காசியாவில் நிலவும் சூழலுக்கு இடையே மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் விளக்கப்பட்டது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் எரிபொருள் இருப்பு, கடல்சார் நடவடிக்கை, அப்பிராந்தியத்தில் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் உதவி, பல்வேறு துறைகளில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். இச்சந்திப்பின் போது கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை சார்பில் புதிய தகவல்களை பகிர்ந்து கொள்ளப்பட்டன.
நாடு முழுவதும் பால் கொள்முதல், பதப்படுத்துதல், விநியோகம் ஆகியவை எந்த இடையூமின்றி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. பால் மற்றும் பால் பொருட்களின் விலை தொடர்ந்து அதே விலையில் நீடிப்பதாகவும் சந்தைக்கான விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என்றும் பால் பண்ணை விவசாயிகளுக்கான தொகை தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
எரிபொருள் விநியோகத்தைப் பொறுத்தவரை, 8.4.2026 அன்று வெளியிடப்பட்ட உத்தரவின்படி, பால் பதப்படுத்தும் ஆலைகள் உள்ளிட்ட முக்கியத் தொழில்கள், மார்ச் 2026-க்கு முந்தைய தங்களின் மொத்த வீட்டு உபயோகமல்லாத எல்பிஜி விநியோகத்தில் 70%-ஐப் பெறுவதை உறுதிசெய்து, பால் பண்ணை செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படுவதைத் தடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, எல்பிஜியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, செயல்பாட்டு ரீதியாக சாத்தியமான இடங்களில் எல்லாம் அனைத்து பால் பண்ணைகளும் எல்பிஜியிலிருந்து குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு வீட்டு உபயோக எல்பிஜி விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எல்பிஜி விநியோகத்தில் பற்றாக்குறை என்ற தகவல் எதுவும் கிடையாது. 2026 மார்ச் முதல், புதிய இணைப்புகளுக்காக 5.68 லட்சம் வாடிக்கையாளர்கள் பதிவுடன் 5.01 லட்சத்திற்கும் அதிகமான குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
2026 பிப்ரவரி 28 முதல் 9 எல்பிஜி கப்பல்களும், ஒரு கச்சா எண்ணெய் கப்பலும் பாதுகாப்பாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன. ஈராக்கில் சிக்கித் தவித்த 12 இந்திய கடற்பயணிகள் பாக்தாதில் உள்ள இந்திய தூதரக உதவியுடன் நேற்று மும்பை வந்தடைந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2254212®=3&lang=1
***
TV/IR/KPG/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2254256)
வருகையாளர் எண்ணிக்கை : 16