பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு
மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் எண்ணெய் சார்ந்திருப்பதை குறைக்க மின்சார வாகனப் பயன்பாட்டை அரசு ஊக்குவிக்கிறது
மின்சார வாகனப் பயன்பாடு மற்றும் உற்பத்தி வேகத்தைத் தக்கவைக்க, பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது
தொழில்துறை முழுவதும் ஆன்லைன் எல்பிஜி முன்பதிவுகள் சுமார் 98% ஆக அதிகரித்துள்ளன
வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் வழக்கம் போல் உள்ளது; வீடுகளுக்கு தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக பெரும்பாலான விநியோகஸ்தர்கள் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட்டனர்
மார்ச் 2026 முதல் நாடு முழுவதும் 1.28 லட்சத்திற்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டு, 59,000-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த இந்தியக் கொடி ஏற்றப்பட்ட எல்பிஜி கப்பலான ஜக் விக்ரம், நாளை காண்ட்லாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 93 பேர் உட்பட 2,177 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர்
பிராந்தியத்தில் உள்ள கப்பல்களில் இருக்கும் இந்திய மாலுமிகளுக்கு இந்தியத் தூதரகங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2026 6:08PM by PIB Chennai
மேற்காசியாவில் நிலவும் சூழலுக்கு இடையே மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் விளக்கப்பட்டது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் எரிபொருள் இருப்பு, கடல்சார் நடவடிக்கை, அப்பிராந்தியத்தில் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் உதவி, பல்வேறு துறைகளில் ஸ்திர தன்மையை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். கனரகத் தொழில்துறையில் புதிய தகவல்கள் குறித்தும் அத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கப்பட்டது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு இடையே, மின்சார போக்குவரத்து மற்றும் முக்கிய கனிமங்கள் உற்பத்தி ஆகியவற்றை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளில் கனரக தொழில்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. மின்சார வாகனங்கள் உற்பத்திக்காக மேலும் ரூ.10,900 கோடி நிதியுதவிக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்து பிரதமரின் திட்டம் 2026 ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய அமைச்சகத்தின் சார்பில் விளக்கப்பட்ட போது, பெட்ரோல், டீசல், எல்பிஜி சிலிண்டர் ஆகியவற்றில் தட்டுப்பாடு நிலவுவதாக எண்ணி அதை வாங்குவதை தவிர்க்குமாறும் அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. எல்பிஜி நுகர்வோர் டிஜிட்டல் முன்பதிவு தளத்தைப் பயன்படுத்துமாறும் விநியோகஸ்தர் அலுவலகங்களுக்கு நேரடியாக செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆன்லைன் வழியிலான எல்பிஜி முன்பதிவு 98 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோம் தடையின்றி நடைபெறுகிறது. பெரும்பாலான விநியோகஸ்தர்கள் ஞாயிற்றுக்கிமைகளிலும் வீடுகளுக்கு விநியோகம் செய்கின்றனர். பதுக்கலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 2026 மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் 1.28 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டு 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
எல்பிஜி சரக்குகளை ஏற்றி வரும் ஜாக் விக்ரம் என்ற இந்தியக் கப்பல் ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்து நாளை கண்ட்லா துறைமுகம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடா பிராந்தியத்திலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 93 பேர் உட்பட 2,177 இந்திய கடற்வழிப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இப்பிராந்தியத்தில் உள்ள கப்பல்களில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர்களுக்கு இந்திய தூதரக் அனைத்து உதவிகளையும் அளித்து இந்தியா திரும்புவதற்கான வசதிகளை அளித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2251616®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2251664)
வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam