பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்காசியாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அமைச்சகங்களின் விளக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
07 APR 2026 5:41PM by PIB Chennai
மேற்காசியாவில் நிலவும் சூழல்கள் குறித்து ஊடகங்களுக்கு தொடர்ந்து தகவல் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு இன்று தேசிய ஊடக மையத்தில் விளக்கமளித்தது. பல்வேறு துறைகளில் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி, வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் எரிபொருள் இருப்பு, கடல்சார் நடவடிக்கைகள், அப்பிராந்தியத்தில் இந்தியர்களுக்கான உதவிகள் குறித்து புதிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
விமானத்துறை தகவல்கள்
தற்போதைய இடர்பாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்துத் துறையின் நிலைத்தன்மையைப் பராமரிக்க பல்முனை அணுகுமுறையை விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடைமுறைப்படுத்துகிறது.
விமான டர்பைன் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதில் அரசு உரிய நேரத்தில் தலையிட்டதன் மூலம் உள்நாட்டு விமான கட்டணம் நிலையாக பராமரிக்கப்படுகிறது. விமான பைலட் பற்றாக்குறையை தடுக்க அவர்களுக்கான விமான பணி நேரத்திற்கான வரையறைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளன.
அத்தியாவசியங்களின் விநியோகத்தைப் பராமரிக்க எமிரேட், குவைத், ஜசீரா விமான நிறுவனங்களின் பயணிகள் விமானங்கள் சரக்குப் போக்குவரத்திற்காகவும் பயன்படுத்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி விநியோகம் மற்றும் எரிபொருள் இருப்பு
உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விநியோகம் தொடர்ந்து இயல்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு நாட்களில் ஐந்து கிலோ எப்டிஎல் சிலிண்டருக்காக சுமார் 1,300 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று 1.06 லட்சம் ஐந்து கிலோ எப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனையாகியுள்ளன.
2026 மார்ச் 23 முதல் சுமார் 7.8 லட்சம் ஐந்து கிலோ எப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனையாகியுள்ளன .
2026 மார்ச் முதல் சுமார் 3.76 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. புதிய இணைப்புகளுக்காக 4.1 லட்சம் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர். தற்போதைய சூழலில் உள்நாட்டு எல்பிஜி விநியோகம் மற்றும் பிஎன்ஜி விநியோகத்தில் குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்காக அரசு முன்னுரிமை அளிக்கிறது. உள்நாட்டு மற்றும் வர்த்தக நுகர்வோர்களுக்காக புதிய பிஎன்ஜி இணைப்பு வசதிகளை ஏற்படுத்துமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியிலான எல்பிஜி முன்பதிவு சுமார் 96 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கப்பல் போக்குவரத்து தகவல்கள்
கடந்த 24 மணி நேரத்தில் 92 இந்திய கப்பல் பணியாளர்கள் உட்பட 1,691-க்கும் மேற்பட்ட இந்திய கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். துறைமுக செயல்பாடுகள் நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி தொடர்ந்து இயல்பாக நடைபெற்று வருகிறது.
பிராந்தியத்தில் இந்தியர்களின் பாதுகாப்பு
பிப்ரவரி 28 முதல் பிராந்தியத்திலிருந்து இந்தியாவுக்கு சுமார் 7,60,000 பயணிகள் திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் இன்று இந்தியாவுக்கு 90 விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியா மற்றும் ஓமனின் பல்வேறு விமான நிலையங்களிலிருந்து இந்தியாவுக்கு தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. கத்தார் வான்வெளி பகுதியளவு தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இன்று சுமார் 8 முதல் 10 விமானங்களை கத்தார் விமான நிறுவனங்கள் இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவைத் வான்வெளி மூடப்பட்டுள்ளது. ஜசீரா மற்றும் குவைத் விமான நிறுவனங்கள், சவுதி அரேபியாவின் தமாம் விமான நிலையத்திலிருந்து விமானங்களை இந்தியாவுக்கு இயக்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249776&v=4®=3&lang=2
***
SS/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2249840)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam